1523
ஆண்டு 1523 (MDXXIII) ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1523 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1523 MDXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1554 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2276 |
அர்மீனிய நாட்காட்டி | 972 ԹՎ ՋՀԲ |
சீன நாட்காட்டி | 4219-4220 |
எபிரேய நாட்காட்டி | 5282-5283 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1578-1579 1445-1446 4624-4625 |
இரானிய நாட்காட்டி | 901-902 |
இசுலாமிய நாட்காட்டி | 929 – 930 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 3 (大永3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1773 |
யூலியன் நாட்காட்டி | 1523 MDXXIII |
கொரிய நாட்காட்டி | 3856 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 20 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- சூன் 6 - சுவீடனின் மன்னராக குஸ்தாவ் வாசா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சுவீடன் டென்மார்க்கிடம் இருந்து முழுமையான விடுதலை8 பெற்றது.
- ஆகத்து 13 – தாமஸ் மோர், இங்கிலாந்து பேரரசின் கீழவையின் அவைத்தலைவர் பதவியில் இருந்தார்.
- நவம்பர் 19 - ஆறாம் கிளெமென்டு 219வது திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.
தேதி அறியப்படாதவை
தொகு- போர்த்துகீசியர் புனித தோமா கல்லறை மீது பெரிய அளவில் சாந்தோம் தேவாலயத்தைக் கட்டி எழுப்பினார்கள்.
- சென்னை, புனித தோமையார் மலையில் போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் அழகியதொரு புனித தோமையார் மலை கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.
- மார்ட்டின் லூதர் செருமானியத்தில் மொழிபெயர்த்த தோரா வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சனவரி 29 ஏனேயா விக்கோ, இத்தாலிய செதுக்குப் பணியாள் (இ. 1567)
- பிப்ரவரி 1 – பிரான்சிஸ்கோ அப்பொன்டியோ கெஸ்திக்லியோனீ, கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 1568)
- பிப்ரவரி 13 – வாலென்டின் நாபொத், செருமானிய வானியலாளர், கணிதயியலாளர் (இ. 1593)
- பிப்ரவரி 20 – ஜன் பிலாஹோஸ்லாவ், செக் எழுத்தாளர் (இ. 1571)
- மார்ச் 17 – ஜியோவன்னி பிரான்சிஸ்கோ கம்மென்டொனெ, கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் (இ. 1584)
- மார்ச் 21 – காஸ்பர் ஏபெர்ஹார்ட், செருமானிய இறையியலாளர் (இ. 1575)
- ஏப்ரல் 5 – பிளேய்சு டி விகெனெரெ, பிரெஞ்சுத் தூதர், மறையீட்டியலாளர் (இ. 1596)
தேதி தெரியாதவைகள்
தொகு- சான்சோ டீ அவிலா, எசுப்பானிய இராணுவத் தலைவர் (இ. 1583)
- காப்ரியல் பெலோபியோ, இத்தாலிய உடற்கூறு வல்லுநர், மருத்துவர் (இ. 1562)
- கிரிஸ்பின் வான் டென் பிரோக், பிளெமிஸ் ஓவியர் (இ. 1591)
இறப்புகள்
தொகு- பிப்ரவரி 4 – தாமசு ரூதால், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.[1]
- மே 7 – பிரான்ஸ் வொன் சிக்கிங்யின், ஜெர்மன் போர்வீரன். (பி. 1481)
- மே 23 – ஆஷிகாஃகா யோஷிடானெ, சப்பானின் இராணுவத் தளபதி (ஷோகன்) (பி. 1466)
- மே 24 – ஹென்றி மார்னெய், முதலாம் பேரன் மார்னெய். இங்கிலாந்து அரசியல்வாதி (பிறப்பு. 1447).
- சூலை 1 – யொகான் எஸ்ச் மற்றும் ஹைன்ரிச் வோய்ச், லூதரனியம் கிறித்தவத்தைப் பரப்பும் பணியின் போது பிரசெல்சுவில்லுள்ள ரோமன் கத்தோலிக்க அதிகாரப் பட்டயங்களால் எரித்துக் கொலையுண்ட முதல் லூத்தரன் வேதசாட்சியாவார். [2]
- ஆகத்து 13 – ஜெரார்ட் டேவிட், பெல்ஜியம் நாட்டின் கலைஞர் (பி. 1455)
- ஆகத்து 29 – உல்ரிச் வொன் கூட்டன், லூதர்ன சமய சீர்திருத்தவாதி (பி. 1488)
- செப்டம்பர் 14 – திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் (பி. 1459)
- அக்டோபர் - வில்லியம் கோர்னிய்ஷ். ஆங்கில மொழி இசையமைப்பாளர்
தேதி தெரியவில்லை
தொகு1523 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ " [Ruthall,_Thomas_(DNB00)|ரூதால், தாமசு]". தேசிய வாழ்க்கை வரலாறு அகராதி - ஆங்கிலம். இலண்டன்: சுமித். எல்டர் & கோ. 1885–1900."
- ↑ Frick, C. J. Herman (1853). "Heinrich Voes and Johannes Esch:'They seem like roses to me' [Voes on the pyre]". Martyrs of the Evangelical-Lutheran Church (3rd ed.). Saint Louis: M. Neidner.