Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                

அப்துல் ஜப்பார்

தமிழ் வர்ணனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (சூன் 26, 1939[1] – திசம்பர் 22, 2020) தமிழக எழுத்தாளரும், ஊடகத்துறையில் ஒரு மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், விளையாட்டு தமிழ் வர்ணனையாளரும், நடிகரும் ஈஎஸ்பிஎன் செய்தி ஆசிரியருமாவார்.[2]

சாத்தான்குளம் எம். அப்துல் ஜப்பார்
பிறப்புஎம். அப்துல் ஜப்பார்
26 சூன் 1939 (1939-06-26) (அகவை 85)
சாத்தான்குளம், தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 22, 2020(2020-12-22) (அகவை 81)
தொழில்ஊடகவியலாளர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
காலம்1951 - 2020
கருப்பொருள்இலக்கியம், சமயம், விளையாட்டுத்துறை

துவக்க‍க்கால வாழ்க்கை

தொகு

அப்துல் ஜப்பார் தமிழ்நாட்டின், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை யூசுப் முகம‍து இலங்கையில் பணியாற்றினார். இதனால் இவர் பிறந்த உடனே இலங்கைக்கு சென்றுவிட்டார். அங்கேயே படித்தார். கொழும்பின் சாகிரா கல்லூரியில் உயர் படிப்பு பயின்றார். கல்வியை முடித்த பின்னர் இலங்கையின் பதட்டமான அரசியல் சூழ்நிலை காரணமாக இவர் மீண்டும் தமிழகத்தின் சாத்தன்குளம் திரும்பினார்.

வானொலியில் துடுப்பாட்ட வர்ணனையாளர்

தொகு

வானொலியின் பொற்காலத்தில் பிறந்த அப்துல் ஜப்பார், இந்தியாவிலும் இலங்கையிலும் தனது குழந்தை பருவத்தில் வழக்கமான வானொலியை கேட்பவராக இருந்தார். வானொலி நிலையங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சிகளைப் பற்றி இவர் அடிக்கடி கடிதங்களை எழுதஉதவுவார். ஒரு சந்தர்ப்பத்தில், இவர் அகில இந்திய வானொலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அதன் தமிழ் மொழி கிரிக்கெட் வர்ணனையை விமர்சித்தது இருந்தார். இந்த கடிதம் ஒலிபரப்பப்பட்டது, மேலும் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையிலான ரஞ்சிக் கோப்பை போட்டியில் முதன்முதலில் தமிழ் வர்ணனையை செய்து. இந்த முதல் வர்ணனையிலேயே நேயர்களின் மனதைக் கவர்ந்தார். இந்த வாய்ப்பு இவரது வாழ்க்கையை மாற்றியது.

1979 ஆம் ஆண்டில் அ.இ.வா சென்னை தமிழ் வர்ணனைக் குழுவில் சேர்ந்தபோது, ​​அப்துல் ஜபருக்கு இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் கணிசமான அனுபவம் இருந்தது.[3] தமிழ் வானொலியின் முன்னோடியும், துடுப்பாட்ட எழுத்தாளர் வி. ராமமூர்த்தியிடம் இருந்து இவர் கணிசமாகக் கற்றுக்கொண்டார். ஜபரின் வர்ணனை 1990 களில் பிரபலமாக இருந்தது.[4] 1982ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டியில் இவரது வர்ணனையைக் கேட்டு அன்னைத தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் பாராட்டினார். 1999, 2004இல் இங்கிலாந்தில் நட்ந்த உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டியை தமிழில் வர்ணனை செய்தார். தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நேயர் பட்டாளத்த்தைக் கொண்டவர். இவரது இலக்கிய நயம்மிக்க தமிழ் வர்ணனையில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரான வேலுபில்லை பிரபாகரன்.[5] பிரபாகரன் இவரை 2002இல் இலங்கைக்கு அழைத்து நேரில் பாராட்டினார்.[6] இந்த சந்திப்பு அனுவபத்தை அழைத்தார் பிரபாகரன் என்னும் பெயரில் நூலாக எழுதினார். 2004 ஆம் ஆண்டில் அ.இ.வா தமிழ் வர்ணனைக் குழு கலைக்கப்பட்டது, அதன்பிறகு அப்துல் ஜப்பார் தொலைக்காட்சி அலைவரிசையான ஈஎஸ்பிஎன், நியோ ஸ்போர்ட்ஸ், சன் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு தமிழ் வர்ணனை தொடர்ந்து வழங்கினார்.[3]

இறப்பு

தொகு

அப்துல் ஜபார் 22 திசம்பர் 2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக தனது 82ஆம் வயதில் இறந்தார்.[7]

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்

தொகு
  • காற்று வெளியினிலே
  • இறைத்தூதர் முஹம்மது - மொழிபெயர்ப்பு நூல் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
  • அழைத்தார் பிரபாகரன்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • லண்டன் தமிழ் வானொலி விருது
  • இலங்கை அரசின் "பத்ருல் மில்லத்" (சமூகத்தின் ஒளி) விருது[சான்று தேவை]
  • துபாயில் 10 அமைப்புகள் சேர்ந்து அளித்த "ஊடகச் செல்வர்" விருது[சான்று தேவை]
  • தமிழ்மாமணி விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "Popular Tamil commentator Abdul Jabbar passes away". dtnext.in. 23 December 2020. Archived from the original on 23 December 2020. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
  2. "காற்று வெளியினிலே". http://www.viruba.com/atotalbooks.aspx?id=334. பார்த்த நாள்: 29 June 2018. 
  3. 3.0 3.1 Seshadri, Badri (10 September 2015). "Languages of cricket – The English effect". Wisden India. Archived from the original on 4 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. G, Sandip (19 September 2017). "India vs Australia: In search of beginnings of Chepauk’s Walajah Road End". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/in-search-of-the-beginnings-of-chepauks-walajah-road-end-4850065/. 
  5. "Prabhakaran’s appreciation was the best award received in life". https://www.sbs.com.au/yourlanguage/tamil/en/audiotrack/prabhakarans-appreciation-was-best-award-received-life. பார்த்த நாள்: 29 June 2018. 
  6. Anwar, S (2011). "Tamil Muslims and the Dravidian Movement: Alliance and Contradictions". In Jairath, Vinod K. (ed.). Frontiers of Embedded Muslim Communities in India. London: Routledge India. pp. 199–200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136196805.
  7. "Popular Cricket commentator Abdul Jabbar passes away". uniindia.com. 23 December 2020. Archived from the original on 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஜப்பார்&oldid=3541053" இலிருந்து மீள்விக்கப்பட்டது