Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                

செ. எ. ஆனந்தராஜன்

செல்லையா எட்வின் ஆனந்தராஜன் (Chelliah Edwin Anandarajan (31 சனவரி 1932 - 26 சூன் 1985) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர்.[1] ஈழப் போரின் போது இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சி. ஈ. ஆனந்தராஜன்
C. E. Anandarajan
பிறப்பு(1931-01-31)31 சனவரி 1931
இறப்பு26 சூன் 1985(1985-06-26) (அகவை 54)
இறப்பிற்கான
காரணம்
சுட்டுக் கொலை
படித்த கல்வி நிறுவனங்கள்கோப்பாய் கிறித்தவக் கல்லூரி
பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
சென்னை கிறித்துவக் கல்லூரி
பணிஆசிரியர், அதிபர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஆனந்தராஜன் 1932 சனவரி 31 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்[2] கோப்பாய் கிறித்தவக் கல்லூரி அதிபர் ஜி. எஸ். செல்லையாவின் மூத்த மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும், பரி. யோவான் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2] பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி கற்று விலங்கியலில் பட்டம் பெற்றார்.[2]

ஆனந்தராஜன் பத்மா கதிர்காமர் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.[2]

இளங்கலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஆனந்தராஜன் 1955 மே மாதத்தில் பரி. யோவான் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2][3] 1975 இல் துணை அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.[3] 1976 மார்ச்சின் அதிபராகப் பதவியேற்று அப்பதவியில் 1985 சூன் மாதத்தில் இறக்கும் வரை தொடர்ந்தார்.[2][3]

படுகொலை

தொகு

ஆனந்தராஜா 1985 சூன் 26 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] இலங்கை ஆயுதப் படைகளுடன் துடுப்பாட்ட நிகழ்வு ஒன்றை ஒழுங்கு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "History". பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம். Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 7.
  3. 3.0 3.1 3.2 "C.E.Anandarajan". Chundikuli St.John's Past Pupils Association. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.
  4. Gautamadasa, Aravinda (29 சூலை 2005). "Commemorating a slain principal". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2014-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140303092150/http://www.island.lk/2005/07/29/opinion5.html. 
  5. "Remembering Former Principal St. John's College Jaffna: Reflections Of A Son". கொழும்பு டெலிகிராப். 22 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._எ._ஆனந்தராஜன்&oldid=3587019" இலிருந்து மீள்விக்கப்பட்டது