ஆண்பால்
பொருள்
(பெ) - ஆண்பால்
- இலக்கணம். உயர்திணையில் ஓர் ஆண் மகனைக் குறிக்கும் பெயர். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைப் பாகுபாடுகளில் ஒன்று; ஐம்பாலில் ஒன்று; பல மொழிகளில் பெயர்ச்சொற்களின் பாகுபாடுகள் மூன்றின் ஒன்று (ஆண்பால், பெண்பால், இரண்டுமல்லா நடுப்பால்).
- உயிரினங்களில் பொதுவாக சூல், சினை, கருவுறும் பெண்பாலுக்கு எதிர்வகையான சூலேற்றும், சினையேற்றும், கருவுறச்செய்யும் வகையான (ஆண்) இனம். செடிகொடிகள் முதல் பாலூட்டிகள் வரை பற்பல உயிரினங்களில் இப்படி பால்வகை உள்ளவற்றில் ஒரு வகை.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- பால் என்றால் பிரிவு. தமிழில், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் என்பன பெயர்ச்சொற்களின் ஐம்பெரும் பாகுபாடு. (அறத்துப்பால், பொருட்பால் இன்பத்துப்பால் என்பதில் வரும் பால் என்பதும் பிரிவைக் குறிக்கும்).
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆண்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற