டெல்லி-மும்பை விரைவுச்சாலை
டெல்லி-மும்பை விரைவுச்சாலை | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) | |
நீளம்: | 1,350 km (840 mi) |
பயன்பாட்டு காலம்: | மார்ச் 2023 – |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | குருகிராம், அரியானா |
தெற்கு முடிவு: | 1. ஜவஹர்லால் நேரு துறைமுகம், மகாராஷ்டிரா 2. விரார், மகாராஷ்டிரா |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா |
முக்கிய நகரங்கள்: | புது டெல்லி, பரிதாபாத், பல்லப்கர், சோஹ்னா, மேவாட் மாவட்டம், அல்வார், தௌசா, சவாய் மாதோபூர், கோட்டா, மண்டோசோர், ரத்லம், தாகோத், கோத்ரா, வதோதரா, பரூச், சூரத், நவ்சாரி, வல்சாடு, விரார், மும்பை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
டெல்லி மும்பை விரைவுச்சாலை என்பது இந்தியாவின் தலைநகரான புது தில்லி முதல் மும்பை வரை அமைக்கப்பட்டு வரும் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட 8 வழிச்சாலையாகும் (எதிர்காலத்தில் 12 வழிச்சாலையாக விரிவாக்க வசதியுள்ளது). ஏற்கனவே கட்டப்பட்டு வந்த வதோதரா-மும்பை விரைவுச்சாலையும் இந்த திட்டத்தில் உட்படுத்தப்பட்டுவிட்டது. நிலம் கையகப்படுத்துதல் செலவையும் சேர்த்து இந்த திட்டத்துக்கான மொத்த செலவு சுமார் ₹1,00,000 கோடியாகும் (~US$13.1 பில்லியன்)[1]
இந்த சாலை டெல்லி யூனியன் பிரதேசம் (9 கி.மீ), ஹரியானா (9 கி.மீ), ராஜஸ்தான் (373 கி.மீ), மத்திய பிரதேசம் (244 கி.மீ), குஜராத் (426 கி.மீ) மற்றும் மகாராஷ்டிரா (171 கி.மீ) ஆகிய மாநிலங்களில் அமைகிறது. பசுமை வழித்தடமாக அமைக்கப்படும் இந்த சாலை டெல்லி மும்பை இடையேயான பயண நேரத்தை 24 நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது [2]