மெலிவுற்ற யுரேனியம்
மெலிவுற்ற யுரேனியம் (depleted uranium, DU, Q-metal, depletalloy அல்லது D-38) என்பது இயற்கை யுரேனியத்தை விடக் குறைந்த அளவு பிளவுறும் ஓரிடத்தான் U-235 ஐக் கொண்டுள்ள யுரேனியம் ஆகும்.[1] (புவியோட்டில் காணப்படும் இயற்கை யுரேனியம் மூன்று ஓரிடத்தான்களின் கலவையாகும்: 99.27% U-238, 0.72% U-235, மற்றும் 0.0055% U-234).
மெலிவுற்ற யுரேனியம் மிக உயர்ந்த அடர்த்தியை (19.1 கி/செமீ3) உடையது. ஈயத்தைவிட 68.4% அடர்த்தி உடையது. இது அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிகோலில் காணப்படுகிறது. வானூர்திகளில் எதிர் எடைகளாக, கதிர் மருத்துவத்தில் கதிர் வீச்சுக் கவசங்களாக, தொழில்முறை கதிர்வரைவியல் உபகரணங்களில், கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு செல்ல உபயோகிக்கப்படும் கலன்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. சில தொலைக்கதிர் மருத்துவக் கருவிகளில் புலத்தேர்விகளிலும் (Collimator) தடுப்புக் கட்டிகளாகவும் (Shielding block) பயன்படுகிறது.
பெரும்பாலான மெலிவுற்ற யுரேனியம் அணுக்கரு உலைகளிலிம், அணு குண்டுத் தயாரிப்புகளிலும் யுரேனியம் செறிவூட்டல் மூலம் துணை விளைபொருளாகக் கிடைக்கிறது.[2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ McDiarmid 2001, ப. 123: "Depleted uranium possesses only 60% of the radioactivity of natural uranium, having been 'depleted' of much of its most highly radioactive U234 and U235 isotopes."
- ↑ "Properties and Characteristics of DU" பரணிடப்பட்டது 2013-02-18 at the வந்தவழி இயந்திரம் U.S. Office of the Secretary of Defense
வெளி இணைப்புகள்
[தொகு]- US Health Physics Society
- "Human rights and weapons of mass destruction, or with indiscriminate effect, or of a nature to cause superfluous injury or unnecessary suffering"
(The UN 2002 report) - Depleted Uranium and the IAEA பரணிடப்பட்டது 2007-12-20 at the வந்தவழி இயந்திரம்
- "Depleted Uranium in Bosnia and Herzegovina – Postconflict Assessment" பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம் by ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
- "Radiological Conditions in Areas of Kuwait With Residues of Depleted Uranium" by பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
- "Technical Report on Capacity-building for the Assessment of Depleted Uranium in Iraq" பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம் by ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
- Depleted Uranium, Health Physics Society