1679
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1679 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1679 MDCLXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1710 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2432 |
அர்மீனிய நாட்காட்டி | 1128 ԹՎ ՌՃԻԸ |
சீன நாட்காட்டி | 4375-4376 |
எபிரேய நாட்காட்டி | 5438-5439 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1734-1735 1601-1602 4780-4781 |
இரானிய நாட்காட்டி | 1057-1058 |
இசுலாமிய நாட்காட்டி | 1089 – 1090 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 7 (延宝7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1929 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4012 |
1679 (MDCLXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 24 - இரண்டாம் சார்லசு அரசர் 18 ஆண்டுகளாக இயங்கிய இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[1]
- சனவரி 28 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மார்ச் 6-மே 27 - இங்கிலாந்தின் புதிய நாடாளுமன்றம் கூடியது.[1] இது சூலை 12 இல் கலைக்கப்பட்டது.
- சூன் 4 - 6.4 அளவுள்ள நிலநடுக்கம் ஆர்மீனியாவின் யெரெவான் பகுதியில் ஏற்பட்டது.
- அக்டோபர் 18 - கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் ரொபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.[2]
- நவம்பர் 27 - மாசச்சூசெட்ஸ் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 80 வீடுகள், அனைத்து சேமிப்புக் கிடங்குகள், மற்றும் பட்டறையில் இருந்த அனைத்துக் கப்பல்களுக் தீக்கிரையாகின.
- திபெத்து-லடாக்-முகலாயப் போர் ஆரம்பமானது. திபெத்து லடாக்கினுள் ஊடுருவியது.
- நயாகரா அருவி கண்டுபிடிக்கப்பட்டது.
- முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஜிஸ்யா வர்யை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
- தமிழ் போர்த்துக்கீசிய அகராதி அன்டேம் டி புரவென்சா என்பவரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- அழுத்த அனற்கலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 4 - தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 278–279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5