Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

1-புரோப்பனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-புரோப்பனால்
Skeletal formula of 1-propanol
Ball and stick model of 1-propanol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-1-ஆல்[1]
வேறு பெயர்கள்
  • n-புரொப்பைல் ஆல்ககால்
  • n-புரொப்பனால்
  • n-PrOH
  • எதில்கார்பினால்
  • 1-ஐதராக்சிபுரோப்பேன்
  • புரோப்பியோனிக் ஆல்ககால்
  • புரோப்பியோனைல் ஆல்ககால்
  • புரோப்பியோனைலால்
  • புரோப்பைல் ஆல்ககால்
  • புரோப்பைலிக் ஆல்ககால்
  • புரோப்பைலால்
இனங்காட்டிகள்
71-23-8 Y
3DMet B00883
Beilstein Reference
1098242
ChEBI CHEBI:28831 Y
ChEMBL ChEMBL14687 Y
ChemSpider 1004 Y
DrugBank DB03175 Y
EC number 200-746-9
Gmelin Reference
25616
InChI
  • InChI=1S/C3H8O/c1-2-3-4/h4H,2-3H2,1H3 Y
    Key: BDERNNFJNOPAEC-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05979 N
ம.பா.த 1-புரோப்பனால்
பப்கெம் 1031
வே.ந.வி.ப எண் UH8225000
  • CCCO
UNII 96F264O9SV Y
UN number 1274
பண்புகள்
C3H8O
வாய்ப்பாட்டு எடை 60.10 g·mol−1
தோற்றம் Colorless liquid
மணம் mild, alcohol-like[2]
அடர்த்தி 0.803 கி/மிலி
உருகுநிலை −126 °C; −195 °F; 147 K
கொதிநிலை 97 முதல் 98 °C; 206 முதல் 208 °F; 370 முதல் 371 K
கலக்குந்தன்மை
மட. P 0.329
ஆவியமுக்கம் 1.99 கிலோபாசுகல் (20 °செல்சியசு)
காடித்தன்மை எண் (pKa) 16
காரத்தன்மை எண் (pKb) −2
−45.176·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.387
பிசுக்குமை 1.959 mPa·s (at 25 °C) [3]
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.68 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−302.79…−302.29 கிலோஜுல்/மோல்
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.02156…−2.02106 MJ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
192.8 J/(K·mol)
வெப்பக் கொண்மை, C 143.96 J/(K·mol)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H225, H318, H336
P210, P261, P280, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை 22 °C (72 °F; 295 K)
Autoignition
temperature
371 °C (700 °F; 644 K)
வெடிபொருள் வரம்புகள் 2.2–13.7%[2]
Lethal dose or concentration (LD, LC):
2800 mg/kg (rabbit, oral)
6800 mg/kg (mouse, oral)
1870 mg/kg (rat, oral)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 200 ppm (500 mg/m3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 200 ppm (500 mg/m3) ST 250 ppm (625 mg/m3) [skin][2]
உடனடி அபாயம்
800 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

1-புரொப்பனால் (1-Propanol) CH3CH2CH2OH என்ற வாய்ப்பாட்டை உடைய முதல்நிலை மதுசாரம் ஆகும். இது ஒரு நிறமற்ற திரவம் ஆகும். இது புரோப்பேன்-1-ஆல், 1-புரொப்பைல் ஆல்ககால், n-புரொப்பைல் ஆல்ககால், மற்றும் n-புரொப்பனால் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஐசோபுரோப்பைல் ஆல்ககாலின் (புரோப்பேன்-2-ஆல், ஐசோபுரோப்பைல் ஆல்ககால், ஐசோபுரோப்பனால்) சமபகுதியம் ஆகும். இது நொதித்தல் செயல்முறைகளில் சிறிதளவு உருவாகிறது. இச்சேர்மம் மருந்தாக்கவியல் துறையில் கரைப்பானாகப் பயன்படுகிறது. இச்சேர்மம் ரெசின்கள் மற்றும் செல்லுலோசு எசுத்தர்களின் கரைப்பானாகப் பயன்படுகிறது.இது ஒரு புரோட்டிக் கரைப்பானகவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பங்களிக்கும் காரணியாகவும் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இதன் ஆவி காற்றை விட கனமானதாகும். மேலும், கண்கள், மூக்கு மற்றும் தொண்டையை லேசாக எரிச்சலூட்டும் தன்மையைக் கொண்டும் உள்ளது.[5]

வேதியியல் பண்புகள்

[தொகு]

1-புரோப்பனால் முதல்நிலை மதுசாரத்தின் வினைகளைத் தருகிறது. இது அல்கைல் ஆலைடுகளைத் தருகிறது; உதாரணமாக, சிவப்பு பாசுபரசு மற்றும் அயோடின் முன்னிலையில் 1-புரோப்பைல் அயோடைடைத் தருகிறது. பாசுபரசு முக்குளோரைடு வினையூக்கி துத்தநாக குளோரைடு முன்னிலையில் 1-புரோப்பைல் குளோரைடைத் தருகிறது. இச்சேர்மம், கந்தக அமிலத்தின் முன்னிலையில் அசிட்டிக் காடியுடன் பிசர் எசுத்தராக்குதல் வினைக்குட்பட்டு புரோப்பைல் அசிட்டேட்டைத் தருகிறது. புரோப்பனால் பார்மிக் அமிலத்துடன் வினைப்பட்டு, புரோப்பைல் பார்மேட்டினைத் தருகிறது. 1-புரோப்பனால் சோடியம் டைக்குரோமேட்டுடன் வினைப்பட்டு புரோப்பியானால்டிகைடைத் தருகிறது. மேலும், இந்த வகை வினைகள் பிரிடினியம் குளோரோகுரோமேட்டைப் பயன்படுத்தும் முறை அல்லது இசுவெர்ன் ஆக்சிசனேற்ற முறை ஆகியவற்றைப் பயன்படுத்தினால் அதிக அளவு புரோப்பனால்டிகைடைத் தருமாதலால் இத்தகைய முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குரோமிக் அமிலத்துடனான ஆக்சிசனேற்றமானது புரோப்பியோனிக் அமிலத்தைத் தருகிறது.

Some example reactions of 1-propanol
Some example reactions of 1-propanol

தயாரிப்பு

[தொகு]

புரோப்பியோனால்டிகைடை வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசனேற்றம் செய்து புரோப்பனால் தயாரிக்கப்படுகிறது.எத்திலீன், கார்பனோராக்சைடு மற்றும் நீரியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கோபால்ட் ஆக்டாகார்பனைல் அல்லது ரோடியம் அணைவுச் சேர்மத்தைப் பயன்படுத்தி ஆக்சோ செயல்முறையின் மூலமாக புரோப்பியானால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.[6]

H2C=CH2 + CO + H2 → CH3CH2CH=O

CH3CH2CH=O + H2 → CH3CH2CH2OH

வழக்கமான ஆய்வகத் தயாரிப்பு முறையானது, n-புரொப்பைல் அயோடைடை ஈரமான வெள்ளி ஆக்சைடுடன் வினைப்படுத்தி 1-புரோப்பனாலைத் தயாரிப்பது ஆகும்.

1-புரோப்பனால் சி.கஸ்டேவ் என்பவரால் 1853 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.பி.சான்செல் என்பவரால் பியூசல் எண்ணெயை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு மூலமாகப் பிரித்தெடுத்தார். உண்மையில், உருளைக்கிழங்குகள் அல்லது தானியங்கள் ஆகியவற்றை நொதித்தல் செயல்முறையில் தயாரிக்கும் போது கிடைக்கும் துணை விளைபொருளான அமினோ அமிலத்திலிருந்து கிடைக்கும் பியூசல் எண்ணெயின் மிக முக்கியமான பகுதிப்பொருள் 1-புரோப்பனால் ஆகும். இந்த செயல்முறை இப்பொழுதெல்லாம் 1-இபுரோப்பனால் தயாரிப்பதற்கான மூலமாகப் பயன்படுவதில்லை.

பாதுகாப்பு

[தொகு]

1-புரோப்பனாலானது மனித உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தில் எத்தனாலை ஒத்ததாகக் கருதப்படுகிறது.ஆனால், 2–4 மடங்குகள் வலிமையானது‌

எரிபொருளாக புரோப்பனால்

[தொகு]

1-புரோப்பனால் உயர் எட்டக எண் கொண்டிருப்பதால் இது உள் எரி பொறிகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இருப்பினும், புரோப்பனாலின் தயாரிப்பு மிகவும் அதிகமான செலவினை ஏற்படுத்துவதாக உள்ளதால் இது பொதுவான எரிபொருளாகப் பயன்படுத்தப்படவில்லை. புரோப்பனாலின் ஆய்வு எட்டக எண் 118 மற்றும் வெடிப்பு எதிர்ப்பு குணகம்108 ஆகவும் உள்ளது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Favre HA, Powell WH (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. p. 61. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780854041824.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0533". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. "Volumetric, acoustic, and viscometric studies of molecular interactions in binary mixtures of dipropylene glycol dimethyl ether with 1-alkanols at 298.15 K". J. Chem. Thermodyn. 40 (5): 818–828. 2008. doi:10.1016/j.jct.2008.01.008. 
  4. "n-Propyl alcohol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. "Propanol". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  6. Papa AJ (2011). "Propanols". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_173.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854.
  7. "Bioalcohols". Biofuel.org.uk. 2010. Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 16 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-புரோப்பனால்&oldid=3906388" இலிருந்து மீள்விக்கப்பட்டது