1694
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1694 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1694 MDCXCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1725 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2447 |
அர்மீனிய நாட்காட்டி | 1143 ԹՎ ՌՃԽԳ |
சீன நாட்காட்டி | 4390-4391 |
எபிரேய நாட்காட்டி | 5453-5454 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1749-1750 1616-1617 4795-4796 |
இரானிய நாட்காட்டி | 1072-1073 |
இசுலாமிய நாட்காட்டி | 1105 – 1106 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 7 (元禄7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1944 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4027 |
1694 (MDCXCIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 5 - நன்னம்பிக்கை முனையில் இருந்து பட்டாவியா நோக்கிச் சென்ற ரிடர்சாப் வான் ஒலாந்து என்ற டச்சுக் கப்பல் கடலில் மூழ்கியது.
- மார்ச் 1 - எச்,எம்,எசு சசெக்சு என்ற 13 கப்பல்கள் கொண்ட தொகுதி ஒன்று ஜிப்ரால்ட்டர் அருகே மூழ்கியதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர்.
- சூலை 3 - யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதி புளோரிசு புளொம் யாழ்ப்பாணத்தில் காலமானார். என்ட்றிக்கு சுவாடிக்குரூன் என்பவர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]
- சூலை 27 - இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டது.
- செப்டம்பர் 5 - இங்கிலாந்து, வாரிக்கு நகரில் பெரும் தீ பரவியது.
- டிசம்பர் 3 - இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் இடம்பெற வகை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[2]
- டிசம்பர் 28 - இங்கிலாந்தின் இரண்டாம் மேரி அரசி பெரியம்மை நோயினால் தனது 32 வது அகவையில் வாரிசு எவருமின்றி காலமானார். இவரது கணவர் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் தனியே ஆட்சி செய்தார்.
- அத்திலாந்திக் அடிமை வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஹனிபல் என்ற இங்கிலாந்து அடிமைக் கப்பல் பெனின் அருகே தனது பயணத்தை முடித்துக் கொண்டது. கப்பலில் இருந்த 692 அடிமைகளில் அரைவாசிப் பேர் கப்பலில் மாண்டனர்.
- யோசப் வாசு அடிகள் இலங்கையில் மாதோட்டம், பூநகரி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[1]
பிறப்புகள்
[தொகு]- சனவரி 3 - சிலுவையின் புனித பவுல், இத்தாலிய புனிதர் (இ. 1775)
- நவம்பர் 21 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)
இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 28 - காப்ரியல் மௌடன், பிரெஞ்சு கணிதவியலாளர் (பி. 1618)
- நவம்பர் 28 - மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644)
- நவம்பர் 29 - மார்செல்லோ மால்பிஜி, இத்தாலிய மருத்துவர் (பி. 1628)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.