1821
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1821 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1821 MDCCCXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1852 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2574 |
அர்மீனிய நாட்காட்டி | 1270 ԹՎ ՌՄՀ |
சீன நாட்காட்டி | 4517-4518 |
எபிரேய நாட்காட்டி | 5580-5581 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1876-1877 1743-1744 4922-4923 |
இரானிய நாட்காட்டி | 1199-1200 |
இசுலாமிய நாட்காட்டி | 1236 – 1237 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 4 (文政4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2071 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4154 |
1821 (MDCCCXXI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 25 (ஜூலியன் நாட்காட்டி)/ஏப்ரல் 6 (கிரிகோரியன் ஆண்டு) - ஒட்டோமான் பேரரசிடம் இருந்து கிரேக்கம் விடுதலையை அறிவித்தது. விடுதலைக்கான கிரேக்கப் போர் ஆரம்பம்.
- ஏப்ரல் 10 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
- மே 5 - பேராரசன் முதலாம் நெப்போலியன் புனித ஹெலனாவில் நாடுகடந்த நிலையில் இறந்தான்.
- ஜூன் 14 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.
- ஜூன் 24 - கரபோபோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சிமோன் பொலிவார் ஸ்பெயினிடம் இருந்தான வெனிசுவேலாவின் விடுதலையை வென்றெடுத்தான்.
- ஜூலை 10 - ஸ்பெயினிடம் இருந்து புதிதாக வாங்கிய புளோரிடாவினுள் ஐக்கிய அமெரிக்கா நுழைந்தது.
- ஜூலை 19 - நான்காம் ஜோர்ஜ் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.
- ஜூலை 28 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- ஆகஸ்ட் 10 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவுடன் 24வது மாநிலமாக இணைந்தது.
- ஆகஸ்ட் 21 - ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - கிரேக்க போராளிகள் கிரேக்கத்தின் திரிப்பொலி நகரின் அனைத்து துருக்கிய மக்களையும் படுகொலை செய்தனர்.
- செப்டம்பர் 15 - ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.
- செப்டம்பர் 27 - மெக்சிகோ ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற்றது.
- நவம்பர் 28 - பனாமா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- உயர்தர பருத்தி எகிப்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாண வாவியில் இறந்த சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள்
[தொகு]- ஆகஸ்ட் 16 - ஆர்தர் கெய்லி, கணிதவியலர் (இ. 1895)
இறப்புக்கள்
[தொகு]- பெப்ரவரி 23 - ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (பி. 1795)
- மே 5 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (பி. 1769)
1821 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan. Alexander I: Tsar of War and Peace. Faber and Faber, 2011 p.416-17
- ↑ Roberts, Warren. Rossini and Post-Napoleonic Europe. Boydell & Brewer, 2015. p.111
- ↑ "History of the Guardian" (in en-GB). The Guardian. December 11, 2017. https://www.theguardian.com/gnm-archive/2002/jun/06/1.