Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கஜன் இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கஜன் ராமநாதன்
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
பதவியில்
20 ஆகத்து 2020 – 24 செப்டம்பர் 2024
முன்னையவர்செல்வம் அடைக்கலநாதன்
வேளாண்மைத் துறைத் துணை அமைச்சர்
பதவியில்
1 நவம்பர் 2018 – 15 திசம்பர் 2018
பதவியில்
12 சூன் 2018 – 26 அக்டோபர் 2018
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஆகத்து 2020 – 24 செப்டம்பர் 2024
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதிதேசியப் பட்டியல்
வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2015
பின்னவர்அகிலதாஸ் சிவக்கொழுந்து
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூலை 1983 (1983-07-09) (அகவை 41)
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு

அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார்.[2][3] இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும்,[4] யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல்[1] சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.[5] சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.[6][7]

அங்கஜன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு புனித தோமையர் ஆரம்பப் பாடசாலை, கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும், பின்னர் சிங்கப்பூரிலும் படித்தார்.[8][9] இவர் ஆத்திரேலியாவில் கணினிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.[8][9]

அங்கஜன் பிரசாந்தினி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது.[9]

அரசியலில்

[தொகு]

இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[10] தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர்.[11] இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை.[12] 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[13]

இராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.[16][17] 2018 சூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[21][22][23] 2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.

அங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[24][25][26] இவர் தனது தேர்தல் பரப்புரைகளுக்கு முகநூல் விளம்பரங்களுக்காக US$15,000 (ரூ.2.7 மில்லியன்) செலவழித்ததாகவும், இவரது மாமனார் எஸ். வின்சேந்திரராஜனின் கெப்பிட்டல் எஃப்.எம் வானொலி ஊடாகப் பெரும் பரப்புரைகளிலும் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டது.[27][28][29][30][31]

தேர்தல் வெற்றியின் பின்னர் அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[32][33] அங்கஜன் இப்பதவியைக் கையேற்ற முதலாவது நாள் "மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தனது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனது பிரதிநிதியாகவும், மாவட்ட அபிவிருத்திப் பேரவையின் அதிகாரியாகத் தனது தந்தையை நியமித்தார்.[34][35] 2020 ஆகத்து 20 இல் புதிய நாடாளுமன்றம் கூடியபோது அங்கஜன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[36][37]

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கஜன் சனநாயகத் தேசியக் கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[38]

தேர்தல் வரலாறு

[தொகு]
அங்கஜன் இராமநாதனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2010 நாடாளுமன்றம்[10] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 3,461 தெரிவு செய்யப்படவில்லை
2013 மாகாணசபை[15] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 10,034 தெரிவு
2015 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[39] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி 36,365 தெரிவு
2024 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் சனநாயகத் தேசியக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Directory of Members: Angajan Ramanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  2. Balachandran, P. K. (22 ஆகத்து 2015). "SL President Sirisena Gains Control Over Parliament And Party". The New Indian Express. http://www.newindianexpress.com/world/SL-President-Sirisena-Gains-Control-Over-Parliament-And-Party/2015/08/22/article2986881.ece1. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2015. 
  3. "Sirisena expands his Cabinet, inducts Tamil from Jaffna". United News of India. 12-06-2018. http://www.uniindia.com/sirisena-expands-his-cabinet-inducts-tamil-from-jaffna/world/news/1259124.html. பார்த்த நாள்: 22-06-2018. 
  4. "Handbook of Parliament: Deputy Chairpersons of Committees". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  5. ரத்னஜீவன் ஹூல் (14 செப்டம்பர் 2013). "The Collapsing Den of Thieves". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2013/09/the-collapsing-den-of-thieves.html. 
  6. "Big time racket of former a human smuggler and a paramilitary leader". Sri Lanka Guardian. 23 சனவரி 2012. http://www.srilankaguardian.org/2012/01/big-time-racket-of-former-human.html. 
  7. Jayadevan, Rajasingham (9 செப்டம்பர் 2013). "Inevitable TNA victory". Sri Lanka Guardian இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924102621/http://www.slguardian.org/inevitable-tna-victory/. 
  8. 8.0 8.1 Wijedasa, Namini (1 November 2012). "Jaffna: Development Without Trust". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/jaffna-development-without-trust/. பார்த்த நாள்: 16 September 2020. 
  9. 9.0 9.1 9.2 Jayawardane, Ishara (28 January 2016). "Master of his fate". Daily News (Colombo, Sri Lanka). http://www.dailynews.lk/2016/01/28/features/master-his-fate. பார்த்த நாள்: 16 September 2020. 
  10. 10.0 10.1 "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  11. "SLFP candidate attacked in Jaffna". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31469. 
  12. "Ruling UPFA Mayor of Jaffna reports of an attempt on her life". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31473. 
  13. "Rajapaksa appoints new SLFP organizer to North". தமிழ்நெட். 22 ஆகத்து 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32465. 
  14. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  15. 15.0 15.1 "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 16 சனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  16. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTION — 2015 Declaration under Article 99A of the Constitution". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/25. 21 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_25/1928_25%20E.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  17. "UPFA finalises National list". டெய்லிமிரர். 21 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/84379/upfa-finalises-national-list. 
  18. "Part I : Section (I) — General - Appointments & C., by the President" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2078/14. Colombo, Sri Lanka. 3 July 2018. p. 2A. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
  19. "Seven new State and Deputy Ministers appointed". Daily FT (Colombo, Sri Lanka). 13 June 2018. http://www.ft.lk/news/Seven-new-State-and-Deputy-Ministers-appointed/56-657110. பார்த்த நாள்: 16 September 2020. 
  20. "New State Ministers & Deputy Ministers sworn in". Daily News (Colombo, Sri Lanka). 13 June 2018. http://www.dailynews.lk/2018/06/13/political/153711/new-state-ministers-deputy-ministers-sworn. பார்த்த நாள்: 16 September 2020. 
  21. "Part I : Section (I) — General - Appointments & C., by the President" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2095/17. Colombo, Sri Lanka. 1 November 2018. p. 2A. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  22. de Alwis, Nathasha (1 November 2018). "New ministers sworn in". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). https://www.newsfirst.lk/2018/11/01/new-minister-sworn-in/. பார்த்த நாள்: 16 September 2020. 
  23. Kuruwita, Rathindra; Ferdinando, Shamindra (2 November 2018). "More ministers sworn in". தி ஐலண்டு (Colombo, Sri Lanak) இம் மூலத்தில் இருந்து 2 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190102050530/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=193730. 
  24. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  25. "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 16 September 2020. 
  26. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 16 September 2020. 
  27. "Sri Lanka’s big Facebook spenders". Tamil Guardian. 4 August 2020. https://www.tamilguardian.com/content/sri-lanka%E2%80%99s-big-facebook-spenders. பார்த்த நாள்: 16 September 2020. 
  28. Rubatheesan, Sandran (16 August 2020). "US $ 10,000 media blitz helps SLFP earn unprecedented victory in Jaffna". Sunday Times (Colombo, Sri Lanka). http://www.sundaytimes.lk/200816/news/us-10000-media-blitz-helps-slfp-earn-unprecedented-victory-in-jaffna-412550.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  29. Ratnajeevan Hoole (1 August 2020). "The EDR: the lynchpin in clean elections". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/columns/The-EDR-the-lynchpin-in-clean-elections/4-703987. 
  30. Ratnajeevan Hoole (16 May 2020). "Right of Reply Dayasiri Jayasekara and SLFP/SLPP intimidate Election Commission". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/news/Right-of-Reply-Dayasiri-Jayasekara-and-SLFP-SLPP-intimidate-Election-Commission/56-700282. 
  31. "Chathurika Sirisena In Frequency Scam: DG TRCSL Rushes To Allocate Frequencies To Sirisena’s Henchmen Illegally". Colombo Telegraph. 6 December 2018. https://www.colombotelegraph.com/index.php/chathurika-sirisena-in-frequency-scam-dg-trcsl-rushes-to-allocate-frequencies-to-sirisenas-henchmen-illegally/. பார்த்த நாள்: 16 September 2020. 
  32. Bandara, Kelum (13 August 2020). "newly sworn Cabinet: New MPs receive more executive authority in new government". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/print/front_page/newly-sworn-Cabinet:--New-MPs-receive-more-executive-authority-in-new-government/238-193734. பார்த்த நாள்: 16 September 2020. 
  33. "New Cabinet sworn in". Daily News (Colombo, Sri Lanka). 12 August 2020. http://www.dailynews.lk/2020/08/12/local/225683/new-cabinet-sworn. பார்த்த நாள்: 16 September 2020. 
  34. "No development projects should be carried out without his approval, says Jaffna DDC Co-Chair". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/no-development-projects-should-be-carried-out-without-his-approval-says-jaffna-ddc-co-chair-413583.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  35. "Angajan demands three rooms at Jaffna District Secretariat". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/columns/shoora-council-dinner-deserted-by-slpp-muslim-mps-413538.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  36. "New Deputy Speaker apppointed". Daily News (Colombo, Sri Lanka). 20 August 2020. https://www.dailynews.lk/2020/08/20/local/226463/new-deputy-speaker-apppointed. பார்த்த நாள்: 16 September 2020. 
  37. "Angajan Ramanathan appointed Deputy Chairperson of Committees". Ceylon Today (Colombo, Sri Lanka). 20 August 2020 இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211026094655/https://ceylontoday.lk/news/angajan-ramanathan-appointed-deputy-chairperson-of-committees. பார்த்த நாள்: 16 September 2020. 
  38. District Result-Jaffna
  39. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கஜன்_இராமநாதன்&oldid=4145270" இலிருந்து மீள்விக்கப்பட்டது