Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அபார் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபார் பிரதேசம்
አፋር ክልል
Qafar Rakaakayak
பிரதேச மாகாணம்
கடிகாரச் சுற்றுப்படி:தல்லோல் எரிமலை, தனாகில் பாலைவன குடிசை;ஒட்டகங்களில் சரக்குப் போக்குவரத்து; ;துப்பாகி ஏந்திய அபார் மனிதன்
அபார் பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அபார் பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அபார் பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அபார் பிரதேசத்தின் அமைவிடம்
நாடுஎத்தியோப்பியா
தலைநகரம்செம்மெரா
அரசு
 • ஆளுநர்அவோல் அர்பா
பரப்பளவு
 • மொத்தம்72,053 km2 (27,820 sq mi)
 [1]
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்18,12,002[2]
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:ET
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.428[3]
low11th of 11
எத்தியோப்பியாவின் பிரதேசங்களும், மண்டலங்களும்
அப்தெரா ஏரி
எர்தா அலே எரிமலை

அபார் பிரதேசம் (Afar Region) எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செம்மெரா நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக அபார் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இதன் தெற்குப் பகுதியில் அவாஸ் ஆறு பாய்கிறது. அபார் பிரதேசம் 72,053 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மேலும் இப்பகுதியில் அவாஸ் தேசியப் பூங்கா, அப்தெரா ஏரி மற்றும் அலே எரிமலை உள்ளது. 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அபார் பிரதேசத்தின் மக்கள் தொகை 18,12,002 ஆகும்.

அமைவிடம்

[தொகு]

அபார் பிரதேசத்தின் வடக்கில் எரித்திரியா நாடும், வடகிழக்கில் திஜிபௌட்டி நாடும், வடமேற்கில் திக்ரே பிரதேசம், தென்மேற்கில் அம்மாரா பிரதேசம், தெற்கில் ஒரோமிய பிரதேசமும், தென்கிழக்கில் திரே தாவா நகரமும் எல்லைகளாக உள்ளது.

நிர்வாக மண்டலங்கள்

[தொகு]
  • அவ்சி ராசு
  • கில்பெர்ட் ராசு
  • காபி ராசு
  • பாண்டி ராசு
  • ஹரி ராசு
  • அர்கோப்பா ராசு

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அபார் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 18,12,002 ஆகும். அதில் 9,91,000 ஆண்கள் மற்றும் 8,21,002 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இசுலாமியர் 95.2%, எத்தியோப்பிய ஆர்தடாக்ஸ் கிறித்துவர்கள் 3.9% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் அபார் இன பழங்குடிகள் 90.03% ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் அபார் மொழியை 89.96% மக்கள் பேசுகின்றனர். அம்மாரிக் மொழி 6.83%, திக்ரே மொழி 1.06%, அர்கோப்பா மொழி [0.79%, வோலைட்டா மொழி 0.43% மற்றும் ஒரோமா மொழியை 0.4% மக்கள் பேசுகின்றனர்.

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்

[தொகு]

நகரங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2011 National Statistics பரணிடப்பட்டது மார்ச்சு 30, 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  3. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபார்_பிரதேசம்&oldid=4122527" இலிருந்து மீள்விக்கப்பட்டது