Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாங் மருத்துவமனை

ஆள்கூறுகள்: 3°7′41″N 101°45′50″E / 3.12806°N 101.76389°E / 3.12806; 101.76389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாங் மருத்துவமனை
Hospital Ampang
அம்பாங் மருத்துவமனை
அமைவிடம் அம்பாங், சிலாங்கூர்
Hospital Ampang, Jalan Mewah Utara, Pandan Mewah,

68000 Ampang, Selangor Darul Ehsan.,
சிலாங்கூர்,
 மலேசியா

ஆள்கூறுகள் 3°7′41″N 101°45′50″E / 3.12806°N 101.76389°E / 3.12806; 101.76389
மருத்துவப்பணி பொது நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை பயிற்சி மருத்துவமனை
முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை,
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
Standards தேசிய தரநிலைகள்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 701 (2024)[1]
நிறுவல் 2006
வலைத்தளம் [இணையத்தளம் அம்பாங் மருத்துவமனை
Hospital Ampang]
பட்டியல்கள்

அம்பாங் மருத்துவமனை (மலாய்:Hospital Ampang; ஆங்கிலம்:Ampang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், தாமான் பாண்டான் மேவா, அம்பாங் நகர்ப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஆகும்.

இந்த மருத்துவமனை சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்து இருந்தாலும், பொதுவாக கோலாலம்பூர் எல்லைப் பகுதியில், மாநகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதனால் கோலாலம்பூர் வாழ் மக்கள் அதிகமானோர் இந்த மருத்துவமனையின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கோலாலம்பூரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கின் சுற்றுப் பகுதியில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக அம்பாங் பகுதியில் வசிப்பவர்களுக்கு, இந்த மருத்துவமனை மருத்துவ சேவைகள் வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. பெரும்பாலோர் கோலாலம்பூர் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

பொது[தொகு]

மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Universiti Sains Islam Malaysia) மருத்துவத் துறை மாணவர்களும்; துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தின் (Universiti Tunku Abdul Rahman) மருத்துவத் துறை மாணவர்களும்; இந்த மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.

7-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், 10 ஏக்கர் நிலத்தில், அம்பாங் மருத்துவமனை கட்டப்பட்டது. பொதுமக்களுக்களின் உடல்நல்ச் சேவைகளுக்காக ஏப்ரல் 2006-இல் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நோய நலப் பிரிவுகளும்; நிபுணத்துவ மருத்துவர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த மருத்துவமனை இரத்தவியல் (Hematology) சிகிச்சைக்கான தேசியப் பரிந்துரை மையமாகவும் விளங்குகிறது.

இந்த மருத்துவமனையில் 701 படுக்கைகள் கொண்ட 17 நோயாளிக் கூடங்கள் (வார்டுகள்) உள்ளன. 'மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு' (Total Hospital Information System) எனும் நவீனத் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்திய முதல் மருத்துவமனை எனும் சிறப்பும் இந்த மருத்துவமனைக்கு உள்ளது. இந்த மருத்துவமனை கோலாலம்பூர் மாநகர் வளகத்தில் இருப்பதால், போக்குவரத்துச் சிரமங்களைத் தவிரிப்பதற்காக, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குக்கும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

கட்டுமான அமைப்பு[தொகு]

  • 1 - மருத்துவமனை முதன்மைக் கட்டிடம்: 8 தளங்கள்
  • 1 - செவிலியர் தங்குமிடக் கட்டிடம்: 4 தளங்கள்
  • 1 - வாகன நிறுத்திமிடம்: 5 தளங்கள்
  • 3 - பணியாளர் குடியிருப்புத் தளங்கள்

முகவரி[தொகு]

Hospital Ampang, Jalan Mewah Utara, Pandan Mewah,
68000 Ampang, Selangor Darul Ehsan.
No. Tel: 03-4289 6000; No. Fax: 03-4295 4666

காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Team, Altfa Support (1 January 1970). "About the Hospital". Hospital Ampang. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாங்_மருத்துவமனை&oldid=4037024" இலிருந்து மீள்விக்கப்பட்டது