Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

எம். டி. ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். டி. ராஜேந்திரன்
M. D. Rajendran
பிறப்புசூலை 5, 1952 (1952-07-05) (அகவை 72)
பொன்குன்னம், கோட்டயம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குநர், பாடலாசிரியர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1979–தற்போது வரை

எம். டி. ராஜேந்திரன் (M. D. Rajendran) ஓர் மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் புதின ஆசிரியரும் ஆவார். இவரது தந்தை பொன்குன்னம் தாமோதரன் ஒரு கவிஞரும், ஆர்வலரும் ஆவார். இவரது உடன்பிறப்புகள், எம். டி. ரத்னம்மா மற்றும் எம். டி அஜயகோஷ் ஆகியோரும் மலையாளத்தில் எழுத்தாளர்களாக உள்ளனர்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்த இராஜேந்திரன் , 2012 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 40 மலையாளத் திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது பாடல்களின் தொகுப்பு 'நின் தும்பு கெட்டித்த சூறல் முடி' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியராக மோகனம் (1979) என்பது இவரது முதல் படம் . இவரது படைப்புகளில் தேவராஜன் இசையமைத்த ஷாலினி என்டே கூட்டுக்காரி மற்றும் அகாதமி விருது வென்ற கீரவாணி [1] [2] இசையமைப்பில் பரதன் இயக்கிய தேவராகம் ஆகியவை அடங்கும். [3] 2014இல் இவருக்கு கேரள சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aparna Banerjea (25 January 2023). "Padma Awards 2023 | 'RRR' fame composer MM Keeravaani honoured with Padma Shri". Moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  2. "M.M. Keeravani: Maestro of Melodies in Indian Cinema - Today National…". 2023-12-29. Archived from the original on 2023-12-29.
  3. MD Rajendran
  4. "Kerala Sangeetha Nataka Akademi Award: Light Music". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._ராஜேந்திரன்&oldid=4045258" இலிருந்து மீள்விக்கப்பட்டது