கண்ணாடி காரல்
கண்ணாடி காரல் | |
---|---|
கண்ணாடி காரல் மீனின், சாதாரண மற்றும் ஊடுகதிர் படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Mene |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/MeneM. maculata
|
இருசொற் பெயரீடு | |
Mene maculata (Bloch & J. G. Schneider, 1801) | |
வேறு பெயர்கள் | |
|
கண்ணாடி காரல் அல்லது அம்பட்டன் கத்தி, நிலவு மீன் (Mene maculata), என்பது மெனை இனத்தின் மற்றும் மெனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆகும். இந்த மீனானது தட்டையாக ஏறக்குறைய வட்டமாக இருக்கும். இதன் அடிப்பகுதி செங்குத்தாக நீண்டும் கூர்மையான ஒரு விளிம்புடன் இருக்கும். இதன் வால் துடுப்பு கவை போல பிளவுபட்டிருக்கும். இதன் வாய் சிறியதாகவும் முன் துருத்தியதாகவும் இருக்கும். இதன் உடலில் பெரும்பகுதி வெள்ளி நிறமாகவும், மேல் பகுதி நீல-பச்சை நிறமாகவும் இருக்கும். மேல் பகுதியில் மூன்று முதல் நான்கு வரிசை அடர் சாம்பல் திட்டுக்கள் இருக்கும். இடுப்புத் துடுப்பின் முதல் இரண்டு கதிர்கள் மிகவும் நீளமாக இருக்கும். இந்த துடுப்புகள் பின்புறமாக நீண்டு இருக்கும்.
இந்த நிலாமீனானது செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் பவளப் பாறைகள் அருகிலுள்ள உவர் மற்றும் கடல் நீரின் அடிப்பகுதியில் காணப்படுகிறது. இவை 50 முதல் 200 மீட்டர்கள் (160 முதல் 660 அடி) வரை) ஆழத்தில் உள்ளன. இந்த இனம் 30 சென்டிமீட்டர்கள் (12 அங்) நீளம்வரை வளரும். இது வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இனமாகும். இதை உப்பு சேர்க்காமல் உலர்த்துவது எளிது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Mene maculata" in FishBase. December 2013 version.