Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கலாமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
കേരള കലാമണ്ഡലം
கலாமண்டலத்தின் நுழைவு வாயிலில் உள்ள கூத்தரங்கம்.
முந்தைய பெயர்
கேரள கலாமண்டலம்
குறிக்கோளுரைDesign a strong system of Art education in the traditional way imbibing The spirit of Enlightenment of the new age
வகைபொது
உருவாக்கம்1930
நிறுவுனர்வள்ளத்தோல் நாராயண மேனன்
Superintendentக. முஜீப் ரகுமான்
துணை வேந்தர்டாக்டர் ஜே. பிரசாத்
முதல்வர்கலாமண்டலம் உன்னிகிருஷ்ணன்
அமைவிடம், ,
வளாகம்செறுதுருத்தி
சுருக்கப் பெயர்கேரள கலாமண்டலம்
இணையதளம்[1]

கலாமண்டலம் (Kalamandalam) என்பது மலையாள தொன்ம கலைகளை வளர்த்தெடுக்க 1927 இல் வள்ளத்தோல் நாராயண மேனன் மற்றும் முகுந்த ராசா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலைக் கல்லூரியாகும். காலனி ஆதிக்கத்தால் கேரளாவின் கதகளி, கூடியாட்டம் போன்ற நடனக் கலைகளில் போதிய பயிற்சியின்றி தரம் குறைவாக காணப்பட்ட சூழலில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது கலாமண்டலம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.

இந்தக் கலைக் கல்லூரியை வளர்க்க நிதிவேண்டி மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார் வள்ளத்தோல் நாராயண மேனன். நிதி திரட்டுவதற்காக ஒரு காலகட்டத்தில் லாட்டரியும் நடத்தி பணம் திரட்டினார்.[1]

பின்னர் அவரது நண்பர் மணக்குளம் முகுந்தராசா, பாரதப்புழை ஆற்றின் கரையில் ஷொரணூர் அருகே உள்ள செறுதுருத்தி என்ற இடத்தில் நிலம் வழங்கினார். அவ்விடத்தில் இக்கலாசாலையை அமைத்து தாமும் அங்கேயே வசிக்கத் துவங்கினார். இவரது நினைவாக இவ்விடம் தற்போது வள்ளத்தோல் நகர் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.

கலாமண்டலத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர்கள்

[தொகு]

கலாமண்டலத்திற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார். 1955ஆம் ஆண்டு கலாமண்டலத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்க ஜவகர்லால் நேருவும், 1980-ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், 1990ஆம் ஆண்டு வி. பி. சிங் மற்றும் 2012 செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலாமண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தொடக்கம்". Archived from the original on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. கலாமண்டலத்தைப் பார்வையிட்ட பிரதமர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமண்டலம்&oldid=3548416" இலிருந்து மீள்விக்கப்பட்டது