Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

களவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Epinephelinae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
களவா
Malabar grouper, Epinephelus malabaricus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Epinephelinae
Tribes and genera

See text

களவா (Groupers) என்பது பேர்சிஃபார்மீசு வரிசையில், செரானைடீ குடும்பத்தில், எபினெபெலினே என்ற துணை குடும்பத்தில், உள்ள பல வகையான மீன்களைக் கொண்ட ஒரு பேரினக் கூட்டம் ஆகும்.

அனைத்து செரனைடர்களும் "களவா" என்று அழைக்கப்படுவதில்லை; இதன் குடும்பத்தில் கொடுவா மீன்களும் அடங்கும். "களவா" என்ற பொதுவான பெயர் சிலசமயம் பொதுவாக இரண்டு பேரின மீன்களான களவாய் மீன் மற்றும் மைக்டெரோபெர்கா ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, சிறிய இனமான அனிபெரிடன், கிரோமிலெப்டெஸ், டெர்மடோலெபிஸ், கிரேசீலா, சலோப்டியா, டிரைசோ ஆகியவற்றில் வகைப்படுத்தப்பட்ட இனங்கள் "களவா" என்றும் அழைக்கப்படுகின்றன. பிளெக்ட்ரோபோமஸ் இனத்தில் உள்ள மீன்கள் 'பவளக் களவா' என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த இனங்கள் அனைத்தும் எபிஃபெலினே என்ற துணைக்குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும்கூட, "களவா" என்ற சொல் பொதுவாக எபினெபெலினே என்ற துணைக்குடும்பத்தை குறிப்பிடும் சொல்லாகவும் எடுக்கப்படுகிறது.

விளக்கம்

[தொகு]
ஒரு களவாவின் உடற்கூறியல்

களவாக்கள் எலும்பு மீனினமாகும். பொதுவாக இவை தடித்த உடலும் பெரிய வாயையும் கொண்டிருக்கின்றன. இவற்றின் உடல் அமைப்பு நீண்ட தொலைவு செல்லவும், விரைவாக நீந்தவும் ஏற்றவையல்ல. இதனால் பெரும்பாலும் இவை இடம்விட்டு இடம் பெயராமல் ஒரே பகுதியிலேயே வாழும். இவை போதுவாக பாறைகள் நிறைந்த கரைப்பகுதிகளில், ஆழம் நிறைந்த பவளப்பாறைகள் உள்ள இடங்களில் வாழ்கின்றன. இவற்றில் மிகப் பெரியதாகவும், ஒரு மீட்டருக்கு மேல் நீளமான மீன்களும் உள்ளன. அட்லாண்டிக் இராட்சத களவா (Epinephelus itajara) 399 கிலோகிராம்கள் (880 pounds) எடையும், 2.43 m (7 அடி 11+12 அங்) நீளமும் கொண்டவை ஆகும்.[2] இந்தப் பெரிய குழுவில் உள்ள மீன் இனங்கள் கணிசமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவை இரையை துண்டுகளாக கடித்து விழுங்குகின்றன. இவற்றின் தாடைகளின் விளிம்புகளில் அதிகப்படியான பற்கள் இல்லை, ஆனால் இவற்றின் தொண்டைப்புரையில் கனமான நசுக்கும் பல் தகடுகளைக் கொண்டுள்ளன. இவை வழக்கமாக மீன், சாக்குக்கணவாய், ஓடுடைய கணுக்காலிகள் போன்றவற்றை உண்கின்றன. சில இனங்கள் தங்கள் இரையை பதுங்கி விரும்புகின்றன. மற்ற இனங்கள் நேரடியாக வேட்டையாடும். ராட்சத க்ரூப்பர் ( எபினெபெலஸ் லான்சோலாடஸ் ) போன்ற மிகப்பெரிய இனங்கள் மனிதர்கள் மீது அபாயகரமான தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக கூறப்பட்டிருந்தாலும், அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை ஆகும்.

இவை தங்கள் வாய் மற்றும் செவுள் மூலம் சக்திவாய்ந்த ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன. அதன் வழியாக இவை இரையை தொலைவிலிருந்து இழுக்கின்றன. இவை தங்கள் வாயைப் பயன்படுத்தி மணலைத் தோண்டி அதை செவுள்கள் வழியாக வெளியேற்றி பெரிய பாறைகளின் கீழ் தங்குமிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன.[சான்று தேவை]

குறிப்புகள்

[தொகு]

 

  1. Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. doi:10.11646/zootaxa.3882.1.1. பப்மெட்:25543675. https://biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.3882.1.1/10480. பார்த்த நாள்: 2021-10-19. 
  2. Robert H. Robins. "Epinephelus itajara". Discover Fish. Florida Museum. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களவா&oldid=3928702" இலிருந்து மீள்விக்கப்பட்டது