Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

குளூக்கொகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளூக்கொகான்
குளூகொகானில் உள்ள அணுக்களின் அமைப்பை காட்டும் குச்சிமணிப் படம்.

குளூக்கொகான் (Glucagon) என்பது மாவுப் பொருள்களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றலைப் பெற பயன்படும் ஓர் உயிர்வேதியியல் வினைக்குறிப்பேந்தி (அல்லது வினைக்குறிப்பூட்டி) ஆகும். இந்த குளூக்கொகான் கணையத்தில் உருவாகின்றது. இரத்தத்தில் குளுக்கோசு மட்டம் குறைந்துவிட்டால், குளூக்கொகான் வெளிப்படுகின்றது. இதனால் கல்லீரலில் சேமித்து வைத்திருக்கும் கிளைக்கோசனை குளுக்கோசாக மாற்றி இரத்த ஓட்டத்தில் கலக்க குறிப்பு தந்து உதவி செய்கின்றது. எனவே குளூக்கொகானின் பணி இன்சுலினின் பணியில் இருந்து நேர்மாறானது. இன்சுலின் பணியானது உடலில் குளூக்கோசு மட்டம் உயர்ந்தால் செல்களுக்குக் குறிப்பு தந்து இரத்தத்தில் இருந்து குளூக்கோசை உள்வாங்கி நீக்க உதவுகின்றது.

குளூக்கொகான் 29 அமினோக் காடிகள் கொண்ட பல்புரதக்கூறாகும். இதன் மூலக்கூறு எடை 3485 டால்ட்டன்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

மாந்தர்களின் உடலில் உள்ள குளூக்கொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது:

NH2-His-Ser-Gln-Gly-Thr-Phe-Thr-Ser-Asp-Tyr-Ser-Lys-Tyr-Leu-Asp-Ser-Arg- Arg-Ala-Gln-Asp-Phe-Val-Gln-Trp-Leu-Met-Asn-Thr-COOH.

சாயம் ஏற்றப்பட்ட குளூக்கொகானின் நுண்படம்

வரலாறு

[தொகு]

இப்பொருளை முதன்முதலாக 1923ல் கிம்பல் (Kimball) என்பாரும் மர்லின் (Murlin) என்பாரும் கண்டுபிடித்தனர். இவர்கள் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்ந்த பொழுது அதிக சக்கரைப் பொருள் (இனியப் பொருள் தங்கும் தன்மையுடைய பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்[1]. பின்னர், 1950களின் பிற்பகுதியில் இதன் அமைப்பை[2] உறுதிசெய்தனர். 1970களில் உடலியங்கியலில் இதன் பங்கை அறியத் தொடங்கினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kimball C, Murlin J. Aqueous extracts of pancreas III. Some precipitation reactions of insulin. J Biol Chem 1923;58:337-348. PDF fulltext பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
  2. Bromer W, Winn L, Behrens O. The amino acid sequence of glucagon V. Location of amide groups, acid degradation studies and summary of sequential evidence. J Am Chem Soc 1957;79:2807-2810.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூக்கொகான்&oldid=3488936" இலிருந்து மீள்விக்கப்பட்டது