Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 01°29′13.5″N 110°20′30.9″E / 1.487083°N 110.341917°E / 1.487083; 110.341917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Kuching International Airport

கூச்சிங் வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: KCH
  • ஐசிஏஓ: WBGG
    KCH WBGG is located in மலேசியா
    KCH WBGG
    KCH WBGG
    கூச்சிங் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்கசானா நேசனல்
Khazanah Nasional
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுகூச்சிங்; கூச்சிங் பிரிவு, சமரகான் பிரிவு & செரியான் பிரிவு; சரவாக், மலேசியா)
அமைவிடம்படவான்; கூச்சிங், சரவாக், கிழக்கு மலேசியா
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL10 ft / 3.048 m
ஆள்கூறுகள்01°29′13.5″N 110°20′30.9″E / 1.487083°N 110.341917°E / 1.487083; 110.341917
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
07/25 3,780 12,402 தார்
புள்ளிவிவரங்கள் (2018)
பயணிகள் போக்குவரத்து5,564,722 (Increase 9.2%)
சரக்கு டன்கள்26,819 (Increase 8.9%)
வானூர்தி போக்குவரத்து56,876 (Increase 11.3%)

கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KCHஐசிஏஓ: WBGG); (ஆங்கிலம்: Kuching International Airport (KIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kuching) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் கூச்சிங் மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 1,780,417. அதே வேளையில் 26,757 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. கூச்சிங் நகர மையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

இந்த வானூர்தி நிலையத்தை அரச மலேசிய விமானப் படையின் (RMAF Kuching Air Base) சரவாக் 7-ஆவது பிரிவும் (7 Squadron RMAF) பயன்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

மலேசியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாக விளங்கும் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம், அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையைச் சமாளித்து வருகிறது.

இந்த நிலையம், மலேசியா எயர்லைன்சு நிறுவனத்துக்கான இரண்டாம் நிலை மையமாக விளங்குகிறது. மேலும் சரவாக் பகுதியில் பயணிகளின் தேவையைச் சமாளிக்கும் திறன் கொண்டு வேகமாகவும் வளர்ந்து வருகிறது.

வரலாறு

[தொகு]

கூச்சிங்கில் முதன்முதலில் ஒரு விமான ஓடுதளம், கூச்சிங் 7-ஆவது மைலில், புக்கிட் ஸ்டாபார் (Bukit Stabar) எனும் இடத்தில் 1938-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதன் நீளம் 700 மீட்டர். அகலம் 300 மீட்டர். பின்னர் 1950 செப்டம்பர் 26-ஆம் தேதி, விமான நிலைய முனையக் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது. [1][2]

அப்போதைய விமான நிலையம்; ஒரு சிறிய "L" வடிவ ஒற்றை மாடிப் பயணிகள் முனையம்; ஒரு சிறிய சரக்குச் சேமிப்பு அறை; மற்றும் ஒரு சிறிய விமான நிலையத் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றைக் கொண்டு இருந்தது. பின்னர் ஓடுபாதை மேம்படுத்தப்பட்டது. 1,372 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம் கொண்ட ஒற்றை ஓடுபாதை.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம், வானிலைச் சேவை மற்றும் பராமரிப்புக் கட்டடம் ஆகியவை வேறு ஒரு பகுதியில் தனியாக இருந்தன.

மலேயன் ஏர்வேஸ்

[தொகு]

கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்; சரவாக், புரூணை மற்றும் வடக்கு போர்னியோ (இன்று சபா என்று அழைக்கப் படுகிறது) ஆகியவற்றின் நுழைவாயிலாக மாறியது. வாரத்திற்கு ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து, டக்ளஸ் டக்கோட்டா (Douglas Dakota) இரட்டை இயந்திரம் கொண்ட விமானங்களை மலேயன் ஏர்வேஸ் (Malayan Airways) நிறுவனம் அறிமுகப் படுத்தியது.

1959-ஆம் ஆண்டில், விக்கர்ஸ் விஸ்கவுண்ட் (Vickers Viscount) ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு வழி வகுக்கும் வகையில் ஓடுபாதை 1,555 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

1962-ஆம் ஆண்டில், டி அவிலாண்ட் காமெட்- 4 (DeHavilland Comet-4) ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக, ஓடுபாதை 1,921 மீட்டர் நீளத்திற்கு மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. அதே ஆண்டில் விமான நிலைய முனையமும் விரிவுபடுத்தப்பட்டது.

கனடா நாட்டு ஆலோசகர் குழு

[தொகு]

16 நவம்பர் 1963-இல், சரவாக் பிரித்தானிய அரசாங்கம் மலேசியா கூட்டமைப்பில் இணைந்தது.

அந்த வகையில் 1971 ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கம் கூச்சிங் பன்னாடு விமான நிலையத்தை அனைத்துலக அளவிற்கு கொண்டு வருவதற்கு, ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆய்வுகள் செய்வதற்காக ஒரு கனடா நாட்டு ஆலோசகர்கள் (Canadian Consultants) குழுவையும் பணியில் அமர்த்தியது.

பரிந்துரைகள்

[தொகு]

டிசம்பர் 1972-இல், ஆலோசகர்கள் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. பரிந்துரைகளில்:

  • பெரிய ஜெட் விமானங்கள் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில், ஓடுபாதையை விரிவாக்கம் செய்தல்; ஓடுபாதையைப் பலப் படுத்துதல்;
  • ஓடுபாதையின் வடக்கு பகுதியில் புதிய முனையக் கட்டடம் கட்டுதல்

போயிங் 707

[தொகு]

ஓடுபாதையை 2454 மீட்டர் நீளத்திற்கு வலுப்படுத்துதல் மற்றும் நீட்டிக்கும் பணி 1973-இல் தொடங்கப்பட்டு 1976-இல் நிறைவடைந்தது. போயிங் 707 (Boeing 707) ரக விமானங்களைக் கையாளும் திறனைப் பெற்றது.

1999-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines); மற்றும் ராயல் புரூணை ஏர்லைன்ஸ் (Royal Brunei Airlines) ஆகிய இரு வெளிநாட்டு விமான நிறுவனங்கள்; மலேசியாவின் மலேசிய ஏர்லைன்ஸ்; மற்றும் 8 தனியார் பொது விமான நிறுவனங்கள்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் திட்டமிடப்பட்ட சேவைகளில் ஈடுபட்டு இருந்தன.

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்

[தொகு]
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 2,923,633 26,278 42,138
2004 3,317,879 Increase 13.5 26,073 0.8 45,340 Increase 7.6
2005 3,354,973 Increase 1.1 28,407 Increase 8.9 43,253 4.0
2006 3,196,352 4.7 29,716 Increase 4.6 40,292 7.4
2007 3,236,468 Increase 1.3 23,818 19.8 37,348 7.3
2008 3,238,614 Increase 0.07 19,166 19.5 39,188 Increase 4.9
2009 3,574,632 Increase 10.4 20,830 Increase 8.7 44,761 Increase 14.2
2010 3,684,517 Increase 3.1 26,977 Increase 29.5 46,382 Increase 3.6
2011 4,286,722 Increase 16.3 24,787 8.1 53,154 Increase 14.6
2012 4,186,523 2.3 15,811 36.2 46,727 12.1
2013 4,871,036 Increase 16.4 21,993 Increase 39.1 56,085 Increase 20.0
2014 4,852,822 0.4 28,040 Increase 27.5 53,490 4.6
2015 4,772,453 1.7 29,362 Increase 4.7 53,303 0.3
2016 4,919,677 Increase 3.1 22,500 23.4 51,855 2.7
2017 5,095,193 Increase 3.6 24,620 Increase 9.4 51,097 1.5
2018 5,564,722 Increase 9.2 26,819 Increase 8.9 56,876 Increase 11.3
2019 5,956,141 Increase 7.0 25,072 6.5 55,682 2.1
2020 1,780,417 70.1 30,724 Increase 22.5 26,757 51.9
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்

உள்நாட்டுச் சேவைகள்

[தொகு]

கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2019 சூலை மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள் (வாரம்) வானூர்தி நிறுவனங்கள்
1 கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் 169 AK, MH, OD
2 சர்வாக் மிரி, சரவாக் 53 AK, MH
3 கோத்தா கினபாலு, 39 AK, MH, OD
3 சர்வாக் சிபு, சரவாக் 35 AK
5 சர்வாக் பிந்துலு, சரவாக் 31 AK
6 ஜொகூர் ஜொகூர் பாரு 28 AK
6 சர்வாக் முக்கா 28 MH
8 பினாங்கு, பினாங்கு 14 AK
9 சர்வாக் தஞ்சோங் மானிஸ் 7 MH
10 சர்வாக் முலு 7 MH
11 கோத்தா பாரு, கிளாந்தான் 3 AK
12 சர்வாக் லிம்பாங் 3 MH

வெளிநாட்டுச் சேவைகள்

[தொகு]
+ கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் வெளிநாட்டுச் சேவைகள் (2019 சூலை மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள் (வாரம்) வானூர்தி நிறுவனங்கள்
1 சிங்கப்பூர் சிங்கப்பூர் 25 AK, MH, TR
2 இந்தோனேசியா பொந்தியானாக் 14 AK, IW
3 புரூணை பண்டார் ஸ்ரீ பகவான் 7 BI

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keat Gin, Ooi (18 February 1999). Rising Sun over Borneo: The Japanese Occupation of Sarawak, 1941–1945. Springer Science+Business Media. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-27300-3.
  2. Chia, Jonathan (25 December 2011). "History through a retiree's lenses". Borneo Post இம் மூலத்தில் இருந்து 28 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130828011722/http://www.theborneopost.com/2011/12/25/history-through-a-retirees-lenses/. "One of his photos shows a large crowd at the opening and open day of Kuching Airport on Sept 26, 1950." 

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]