கூட்டல் கணித இதழ்
புகழ்பெற்ற இணைய இதழான கூட்டல் இதழ் அல்லது பிளஸ் இதழ் (Plus Magazine) என்பது, கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கணிதத் திட்டத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.
இதழின் உள்ளடக்கம்
[தொகு]- கணிதம் சார்பான சிறப்புக் கட்டுரைகள்
- புகழ்பெற்ற கணித நூல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய மீளாய்வு
- செய்திப் பிரிவு
- கணிதப் புதிர்களும் விளையட்டுகளும்
- கணிதவியலாளர்களின் பேட்டிகள்
- கணித நகர்வுகள்
வரலாறு
[தொகு]1997ல் இவ்விதழ் பாஸ் மேத்ஸ் (PASS Maths) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் மற்றும் கீலெ பல்கலைக்கழகத்துடன் இணைந்து கணிதம் ஆய்வு , கலந்துரையாடல் இயக்கமாக துவங்கியது. இன்று உலக அளவிலும் ஐக்கிய இராச்சியம் அளவிலும் நூற்றாண்டு கணிதத் திட்டமாக கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தின் பகுதியாகச் செயல்படுகிறது.
சிறப்புகள்
[தொகு]ஸ்டீபன் ஹோக்கிங் ,மார்கசு டூ சவுடாய் ஆகியோர் ஆசிரியர் குழுவில் உள்ளனர்][1] [2].இவ்விதழ் 2001ல் சிறந்த அறிவியல் இதழாக தேர்வு செய்யப்பட்டு வெப்பி (Webby) விருது பெற்றது[3]. மேலும் கணிதத்தின் மேல் உண்மையான அன்பு கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட களம் எனவும் விவரிக்கப்பட்டது.[4]. 2006 ஆம் ஆண்டில் நூற்றாண்டு கணிதத் திட்டத்தின் பகுதியான இவ்விதழ் உயர்கல்விக்கான அரசியின் நினைவுப் பரிசினைப் பெற்றுள்ளது[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stephen Hawking's 60 years in a nutshell by ஸ்டீபன் ஹோக்கிங்; Plus Magazine Issue 18, January 2002
- ↑ The music of the primes by Marcus du Sautoy; Plus Magazine Issue 28, January 2004
- ↑ 5th Annual Webby Awards
- ↑ Higher education news, தி கார்டியன்
- ↑ Previous Prize winners பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் , Royal Anniversary Trust