கே. பி. நாராயண பிசரோடி
கொடிக்குன்னு பிசராத்து நாராயண பிசரோடி (Kodikkunnu Pisharathu Naryan Pisharodi) (ஆகஸ்ட் 23,1909-மார்ச் 21,2004) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]இவர் ஆகஸ்ட் 23,1909 அன்று பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி அருகில் உள்ள கொடிக்குன்னுவில் புதிசேரி பசுபதி நம்பூதிரி மற்றும் நாராயணி பிசராசியார் ஆகியோருக்கு பிறந்தார். பட்டாம்பியைச் சேர்ந்த புன்னச்சேரி நம்பி நீலகண்ட சர்மா மற்றும் ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி ஆகியோரிடமிருந்து சமசுகிருதத்தைக் கற்றுக்கொண்டார்.
1932 இல் பட்டாம்பி சமசுகிருதக் கல்லூரியில் சாகித்யசிரோமணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மலையாளம் மற்றும் சமசுகிருதம் கற்பித்தார். பின்னர், திருச்சூரில் உள்ள ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் பணியில் சேர்ந்த இவர் ஓய்வு பெற்ற பிறகு, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித்தொகையின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்டார். "சாகித்ய நிபுணன்" "பண்டித திலகம்" மற்றும் "சாகித்ய ரத்தினம்" என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு கேரள அரசின் உயரிய இலக்கிய விருதான "எழுத்தச்சன் புரஸ்காரம்" பிசரோடிக்கு வழங்கப்பட்டது.
இறப்பு
[தொகு]பிசரோடி தனது 94வது வயதில் 21 மார்ச் 2004 அன்று திருச்சூரில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]