சம் சுயி போ மாவட்டம்
சம் சுயி போ மாவட்டம்
Sham Sui Po District | |
---|---|
வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Dr CHAN Tung, SBS, JP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.48 km2 (3.66 sq mi) |
• நிலம் | 12 km2 (5 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 3,65,540 |
நேர வலயம் | ஒசநே+8 (Hong Kong Time) |
இணையதளம் | சம் சுயி போ மாவட்டம் |
சம் சுயி போ மாவட்டம் (Sham Shui Po District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில், கவுலூன் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். ஹொங்கொங்கிலேயே வசதிக் குறைவானோரைக் கொண்ட மாவட்டம் இதுவாகும். அத்துடன் நான்காவது ஆகக்குறைந்த கல்வியறிவை கொண்டோர் வாழும் மாவாட்டம் இதுவாகும். ஆகக்குறைந்த வருமானத்தை ஈட்டுவோரோ இம்மாவட்டத்தில் அதிகமானோர் ஆகும். இடைப்பட்ட வருமானத்தைப் பெருவோரும் உள்ளனர். மிகுந்தக் கடினமான கூலித்தொழில் தொழில் நிலைகளை அதிகம் கொண்டோர் இம்மாவட்டத்தில் உள்ளனர்.[1] அத்துடன் ஹொங்கொங் நிலப்பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மறைந்துப் போன கல்லுடைப்பான் தீவு இந்த மாவட்டத்தில் நிலப்பரப்பில் தற்போது கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புடன் இணைந்து இந்த மாவட்டத்தின் நில எல்லைக்குள் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியர், பாக்கிசுதானியர், இலங்கையர், வங்காளி இனத்தவர் போன்றோர் கூலித் தொழிலாளர்களாக இந்த மாவட்டத்திலேயே வசிக்கின்றனர். இவரகள் அதிகமானோர் சம் சுயி போ நகரில் ஹொங்கொங் குப்பை சந்தையில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இந்திய மற்றும் இலங்கை தமிழர்களும் அதிகமானோர் இங்கு தான் வேலை செய்கின்றனர்.
பிரதான நகரங்கள்
[தொகு]இம்மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:
- செக் கிப் மேய்
- சம் சுயி போ
- செங் சா வான்
- லாய்ச்சி கொக்
- யவ் யத் சுன்
- புதிய கவுலூன்
- கவுலூன் டொங்
- மெய் பூ சுன் சென்
- சோ அக்
- யவ் யத் சுன்
சிறப்புகள்
[தொகு]இந்த மாவட்டத்தில் அப்லியூ வீதி (Apliu Street) ஹொங்கொங்கில் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாகும். இலத்திரனியல் பொருற்கள், இலத்திரன் பொருற்களின் உதிரிப்பாகங்கள் புதிய மற்றும் பழைய பொருற்கள் கிடைக்கும் இடம் இந்த மாவட்டம் ஆகும்.
அத்துடன் தங்கக் கணினி மையம் (Golden Computer Center) எனும் கணினி மட்டுமே விற்பனை செய்யும் மிகப் பெரிய அங்காடி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த அங்காடி கட்டடம் ஹொங்கொங்கில் மிகவும் பிரசித்திப்பெற்றக் கட்டடமாகும்.
இந்த மாவட்டம் 1950 மற்றும் 1960 களில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டமாகும். ஹொங்கொங்கின் வளர்ச்சியின் காரணமாக படித்தோர் மற்றும் வசதிபடைத்தோர் இந்த மாவட்டத்தின் இருந்து தற்கால வசதிகளுடன் கூடிய குடியிருப்பு தொகுதிகளுக்கு போகின்றனர்.
இம்மாவட்டத்தின் வீட்டுக் குடியிருப்புத் தொகுதிகள் அதிகமானவை 100 - 50 ஆண்டுகள் பழமையானவைகளாகும். அவை 8 மற்றும் 9 மாடிகளை கொண்ட வீடுகளே அதிகம். கிட்டத்தட்ட 90 க்கும் அதிகமானவை பழங்கால வீட்டுத் தொகுதிகளாகும். அவற்றில் அநேகமானவற்றில் மின்தூக்கிகள் இல்லை. ஓரளவு வசதியிடையோர் அல்லது படித்தோர் வேறு இடங்களுக்கு நகர்ந்து விடுவதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் தென்னாசிய நாட்டவர்களின் வாடகை வீடுகளாகியுள்ளன.
இருப்பினும் புதிதாக கட்டபடும் வீட்டுத் தொகுதிகள், ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் கட்டுவதைப் போன்றே எழுல்மிகு வசதியான வீட்டுத் தொகுதிகளாக எழுப்பப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து
[தொகு]இந்த மாவட்டத்தில் நான்கு தொடருந்த சேவை பாதைகள் ஓடுகின்றன.
- குவுன் டொங் தொடருந்துப் பாதை
- சுன் வான் தொடருந்து பாதை
- டுன் சுங் தொடருந்து பாதை
- மேற்கு தொடருந்து சேவை
நூற்றுக்கணக்கான பேருந்து சேவைகள் இந்த மாவட்டத்தின் ஊடாக ஓடுகிறது. பல பேருந்து நிறுத்தகங்களும் உள்ளன. அதேப்போன்றே சிற்றுந்து சேவைகளும் சிற்றுந்து நிறுத்தகங்களும் பல உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]ஒங்கொங்:விக்கிவாசல் |
- ↑ "Basic Tables for District Council Districts: Hong Kong 2006 By-Census" (PDF). Archived from the original (PDF) on 2017-07-22. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17.
வெளியிணைப்புகள்
[தொகு]- Sham Shui Po District Council பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies (large PDF file) பரணிடப்பட்டது 2006-10-23 at the வந்தவழி இயந்திரம்
- Visit Shamshuipo பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்