Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

சான்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்சி மாகாணம்
Shanxi Province
山西省
பெயர் transcription(s)
 • சீனம்山西省 (Shānxī Shěng)
 • சுருக்கம்எளிய சீனம்: (pinyin: Jìn)
Map showing the location of சான்சி மாகாணம் Shanxi Province
சீனாவில் அமைவிடம்: சான்சி மாகாணம்
Shanxi Province
பெயர்ச்சூட்டு shān - மலை
西 xī - மேற்கு
தாய்ஹாங் மலைகளின் மேற்கு
தலைநகரம்தையுன்
பெரிய நகரம்தையுவான்
பிரிவுகள்11 அரச தலைவர், 119 கவுண்டி மட்டம், 1388 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்வாங் ருலின்
 • ஆளுநர்லி சியோபிங்
பரப்பளவு
 • மொத்தம்1,56,000 km2 (60,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை19வது
மக்கள்தொகை
 (2014)[2]
 • மொத்தம்3,65,00,000
 • தரவரிசை18வது
 • அடர்த்தி230/km2 (610/sq mi)
  அடர்த்தி தரவரிசை19வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் - 99.7%
ஊய் - 0.2%
 • மொழிகளும் கிளைமொழிகளும்ஜின், ழோங்யுவான் மாண்டரின், ஜிலு மாண்டரின்
ஐஎசுஓ 3166 குறியீடுCN-14
GDP (2014)CNY 1,275.9 billion
US$ 207.69 billion[3] (21வது)
 • per capitaCNY 34,956
US$ 5,690 (17வது)
HDI (2010)0.693<[4] (medium) (15வது)
இணையதளம்www.shanxigov.cn (சீன மொழி)
சான்சி
சீன மொழி 山西
PostalShansi
Literal meaningதாய்ஹாங் மலைகளின் மேற்கு

சான்சி மாகாணம் (Shanxi, சீனம்: 山西பின்யின்: Shānxī) என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடக்கு வட்டாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெயரான சான்சி என்பதன் பொருள் மலைத்தொடரின் மேற்கு என்பதாகும். இந்த மாகாணம் தாய்ஹான் மலைகளின் மேற்கில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

சான்சி மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கே ஏபெய் மாகாணமும், தெற்கில் ஹெய்நான் மாகாணமும், மேற்கில் சென்சி மாகாணம், வடக்கில் உள் மங்கோலியாவும் உள்ளன. இந்த மாகாணம் ஒரு பீடபூமியாகும் இது மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் தையுவான் ஆகும்.

வரலாறு

[தொகு]

கி. மு. 722-403 கால இடைவெளியில் ஜின் அரசு தற்போதைய ஷாங்சியில் அமைந்திருந்தது. இது கி.மு 403 தொடக்கத்தில் ஹான், ழாவோ, வேய் என மூன்றாக பிளவுபட்டிருந்தது. கி. மு. 403-221 காலகட்டத்தில் போரிடும் நாடுகள் காலத்தில் இந்த மாநிலங்கள் வீழ்ச்சியடைந்தபின் குன் மரபினரின் குன் அரசுடன் (கி.மு.221-206 ) இணைக்கப்பட்டன.

பொருளாதாரம்

[தொகு]

ஷங்சி மாகாணத்தில் மக்களின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய அளவில் சராசரி உற்பத்தியைவிடக் குறைவாக உள்ளது. கிழக்குச்சீனாவில் உள்ள மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், ஷங்சி மாகாணம், வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாகக் கடல்வழியே வணிகம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ள கிழக்குக்கடற்கரை மாகாணங்களைப் போலல்லாது அமைந்துள்ள இதன் புவியியலமைப்பு சர்வதேச வணிகத்தில் ஈடுபடத்தடையாக உள்ளது. ஷங்சி மாகாணத்தில் விளையும் முக்கிய பயிர்கள் கோதுமை, மக்காச்சோளம், கம்பு, பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு போன்றவை ஆகும். ஷங்சியின் உள்ளூர் காலநிலை மற்றும் குறுகிவரும் நீர்வளம் போன்ற காரணங்களால் வேளாண்மையை ஒரு அளவுக்குமேல் விரிவுபடுத்த இயலாத நிலையுள்ளது.[5]

சான்சி மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலக்கரி இருப்பு 260 பில்லியன் மெட்ரிக் டன்களாகும். இது சீனாவின் மொத்த நிலக்கரி இருப்பில் மூன்றில் ஒரு பங்கு. இதனால் சான்சி மாகாணத்தில் நிலக்கரி வெட்டியெடுக்கும் தொழில் சிறப்பாக உள்ளது. இதனால் சீனாவின் முன்னணி நிலக்கரி நிறுவனங்கள் இங்கு உள்ளன.[6] இங்கு ஆண்டுக்கு 300 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரிக்குமேல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தத்தோங் (大同), நிங்வு (宁武), கிசின் (西山), ஹிடாங் (河东), குங்சிய் (沁水), ஹுவோக்சி (霍西) ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் சான்சி மாகாணத்தில் சுமார் 500 மில்லியன் டன் பாக்சைட் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்தச் சீன பாக்சைட் இருப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.[7][8]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இங்கு வாழும் மக்களில் பெரும்பாண்மையானோர் ஹான் சீன மக்கள் இனத்தவர்கள். மேலும் மங்கோலியர், மன்சு, ஊய் மக்கள் ஆகிய சிறுபாண்மையினரும் கணிசமாக வாழ்கின்றனர். [9]

ஷங்சியின் இனக்குழுவினர், 2000 கணக்கீடு
தேசிய இனம் எண்ணிக்கை விழுக்காடு
ஹான் சீனர் 32,368,083 99.68%
ஊய் 61,690 0.19%
மஞ்சு இனக்குழு 13,665 0.042%
மங்கோலியர் 9,446 0.029%

2004 ஆம் ஆண்டில், பிறப்பு விகிதம் 1000 மக்களுக்கு 12.36 ஆகவும், இறப்பு விகிதம் 1000 மக்கள் தொகைக்கு 6.11 ஆகவும் இருந்தன. பாலின விகிதம் 105.5 ஆண்களுக்கு 100 பெண்கள் என்று இருந்தது. [1] பரணிடப்பட்டது 2006-02-21 at the வந்தவழி இயந்திரம்

சமயம்

[தொகு]

சான்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 15.61% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள்தொகையில் 2.17% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[10] மக்கள்தொகையில் 82.22% பேர் மதம் பற்றிய விவரங்களைக் கொடுக்கவில்லை இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம், கன்பூசிம், தாவோ, மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர் இருக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Geography". Shanxi Tourism Bureau. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "山西省2013年国民经济和社会发展统计公报". Shanxi Government. 国家统计局山西调查总队. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  4. "China Human Development Report 2013" 《2013中国人类发展报告》 (PDF) (in சீனம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டம் China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
  5. "Infos on Shanxi official website". Archived from the original on 2006-02-20. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  6. "Shanxi Province: Economic News and Statistics for Shanxi's Economy". Archived from the original on 2011-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  7. "3.9.1 Resources-China Mining". Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  8. hktdc.com - Profiles of China Provinces, Cities and Industrial Parks
  9. ஆதாரம்: சீன தேசிய புள்ளிவிவரம் (国家 统计局 人口 和 社会 科技 统计 司) மற்றும் சீனாவின் மாநில பொருளாதார அபிவிருத்தி துறை பாரம்பரிய விவகார ஆணையம் (国家 民族 事务 委员会 经济 மக்கள் தொகை, சமூக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புள்ளியியல் துறை发展司), பதிப்பு. சீனாவின் 2000 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ("2000年人口普查中国民族人口资料") தேசிய மீது டாபுலேஷன். 2 தொகுப்புகள். பெய்ஜிங்: இன பப்ளிஷிங் ஹவுஸ் (民族出版社), 2003 ( ஐஎஸ்பிஎன் 7-105-05425-5 )
  10. China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: Xiuhua Wang (2015, p. 15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சி&oldid=3929703" இலிருந்து மீள்விக்கப்பட்டது