சித்திவேனி ரபுக்கா
சித்திவேனி ரபுக்கா Sitiveni Rabuka | |
---|---|
2020 இல் ரபுக்கா | |
பிஜி பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 திசம்பர் 2022 | |
குடியரசுத் தலைவர் | விலியம் கத்தோனிவேரே |
முன்னையவர் | பிராங்க் பைனிமராமா |
பதவியில் 2 சூன் 1992 – 19 மே 1999 | |
முன்னையவர் | கமிசேசி மாரா |
பின்னவர் | மகேந்திர சவுத்திரி |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 26 நவம்பர் 2018 – 7 திசம்பர் 2020 | |
பிரதமர் | பிராங்க் பைனிமராமா |
முன்னையவர் | தெய்மூமு கெப்பா |
பின்னவர் | நைக்காமா லலபலாவு |
பிஜி இராணுவப் படைகளின் தளபதி | |
பதவியில் 1987–1992 | |
சக்கோடிரோவ் மாகாண சபைத் தலைவர் | |
பதவியில் 24 மே 2001 – 2008 | |
சமூக சனநாயக தாராண்மைவாதக் கட்சித் தலைவர் | |
பதவியில் 24 சூன் 2016 – 28 நவம்பர் 2020 | |
முன்னையவர் | தெய்மூமு கெப்பா |
பின்னவர் | விலியம் கவோக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1948 கேக்காவ்துரோவ், பிஜி |
அரசியல் கட்சி | மக்கள் கூட்டணி (2021 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | சுலுவெத்தி துய்லோமா (தி. 10 ஏப்ரல் 1975) |
புனைப்பெயர்கள் | |
Military service | |
பற்றிணைப்பு | |
கிளை/சேவை | பிஜி இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1968–1991 |
தரம் | மேஜர் செனரல் |
கட்டளை | பிஜி படைப்பிரிவு |
போர்கள்/யுத்தங்கள் | லெபனான் உள்நாட்டுப் போர் |
விருதுகள் | செவாலியே விருது (பிரான்சு) |
சித்திவேனி லிகமமாடா ரபுக்கா (Sitiveni Ligamamada Rabuka[3]; பிறப்பு: 13 செப்டம்பர் 1948) பிஜி அரசியல்வாதி ஆவார். இவர் 2022 திசம்பர் 24 முதல் பிஜியின் பிரதமராகப் பதவியில் உள்ளார்.[4] இவர் 1987 இல் இரண்டு முறை இராணுவப் புரட்சிகளைத் தூண்டினார். பிஜியின் பிரதமராக 1992 முதல் 1999 வரை பதவியில் இருந்த இவர் 2022 முதல் மூன்று கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்று மீண்டும் பிரதமரானார். இவர் 1999 முதல் 2001 வரை இராணுவத் தளபதிகளின் பேரவைக்குத் தலைவராக இருந்துள்ளார். பின்னர் 2001 முதல் 2008 வரை கேக்காவ்துரோவ் மாகாணசபையின் தலைவராக இருந்துள்ளார்.
ரபுக்கா 2016 இல் எதிர்க்கட்சித் தலைவரான ரோ தெய்முமு கெப்பாவுக்குப் பிறகு, சமூக சனநாயக லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2018 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, 2018 இல் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ரபுக்கா நியமிக்கப்பட்டார்.[6] 2020 நவம்பரில் இவர் லிபரல் கட்சித் தலைவர் போட்டியில் விலியம் கவோக்காவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[7] அதைத் தொடர்ந்து ரபுக்கா பிஜியில் நல்லிணக்கம், முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை உருவாக்க பிஜித் தலைவர்கள் எடுக்கும் இருதரப்பு அணுகுமுறைக்கு தான் இனி தடையாக இருக்க மாட்டார் எனக் கூறி, நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகினார்.[8] தொடர்ந்து 2022 தேர்தலில் போட்டியிட, மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.[9]
2022 தேர்தலைத் தொடர்ந்து ரபுக்காவின் மக்கள் கூட்டணி இரண்டாவது பெரிய கட்சியாக உருவானது, அத்துடன் 16 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பிராங்க் பைனிமராமாவை வெற்றிகரமாக வெளியேற்றி, லிபரல் கட்சி, தேசிய கூட்டமைப்பு கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ரபுக்கா தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்க்கப்பட்டது. ரபுக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Transparency Lessons for the US from Fiji". 22 December 2022.
- ↑ "Sitiveni 'Rambo' Rabuka confirmed as Fiji's new prime minister".
- ↑ Howell, Bronwyn (22 December 2022). "Electoral Transparency Lessons for the US from Fiji". AEI. https://www.aei.org/technology-and-innovation/electoral-transparency-lessons-for-the-us-from-fiji/.
- ↑ "Fiji parliament confirms Sitiveni Rabuka as prime minister after days of uncertainty". The Guardian. 24 December 2022.
- ↑ "Sitiveni Rabuka wins leadership of Fiji's SODELPA". RNZ International. 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- ↑ "Rabuka named as Fiji opposition leader". RNZ International. 26 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
- ↑ "Fiji's main opposition party chooses a new leader". RNZ. 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
- ↑ "Rabuka resigns from Parliament". 7 December 2020. Archived from the original on 26 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Nacei, Luke (10 December 2020). "Rabuka forming new party". FijiTimes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 December 2022.
- ↑ Needham, Kirsty (20 December 2022). "Fiji has new government after three parties form coalition" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/fiji-has-new-government-after-three-opposition-parties-form-coalition-2022-12-20/.
- ↑ "Sitiveni Rabuka is Fiji's new prime minister". RNZ. 24 December 2022 இம் மூலத்தில் இருந்து 24 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20221224042426/https://www.rnz.co.nz/international/pacific-news/481392/sitiveni-rabuka-is-fiji-s-new-prime-minister.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Truth, lies and elections", article by Sitiveni Rabuka in the பிஜி டைம்ஸ், 3 October 2008