சிவசந்திரன்
சிவசந்திரன் | |
---|---|
பிறப்பு | நாராயணன் |
பணி | நடிகர், இயக்குநர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–1999 |
வாழ்க்கைத் துணை | லட்சுமி (தி. 1987) |
பிள்ளைகள் | சம்யுக்தா (2000இல் தத்தெடுத்தது) |
நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது திரைப் பெயரான சிவச்சந்திரன் (Sivachandran) என்பதன் மூலம் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.
தொழில்
[தொகு]சிவச்சந்திரன் பட்டினப்பிரவேசம் (1977) திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்.[1] பின்னர் அன்னபூரணி (1978) படத்தில் ஆர். முத்துராமனுடன் எதிர்மறை வேடத்தில் நடித்தார். அவள் அப்படித்தான் (1978) மற்றும் பொல்லாதவன் (1980) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.[2] என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் , பிரபுவின் பல படங்களை இயக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிவச்சந்திரன் என்று பெயரை மாற்றி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப் பெயரானது சிவாஜி கணேசனிடமிருந்து "சிவா"வையும் எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து "சந்திரன்" என்பதையும் இணைத்து உருவாக்கபட்டதாகும்.[3]
என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லட்சுமியை காதலித்தார். அவர்கள் இருவரும் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர்.[2]இவர் மீண்டும் இயக்கிய இரத்த தானம் (1988), ஜோடி சேந்தாச்சு (1992) ஆகிய படங்களில் மீண்டும் லட்சுமியுடன் சேர்ந்து பணியாற்றினார். சிவச்சந்திரனும் லட்சுமியும் 2000 ஆம் ஆண்டில் சம்யுக்தா என்ற பெண்ணை தத்தெடுத்தனர்.
திரைப்படவியல்
[தொகு]நடிகராக
[தொகு]- படங்கள்
- தொலைக்காட்சி
- அரசி (சன் தொலைக்காட்சி)
- மகாலட்சுமி (கலைஞர் தொலைக்காட்சி)
இயக்குநராக
[தொகு]- என் உயிர் கண்ணம்மா (1988)
- இரத்த தானம் (1988)
- ஹொச காவ்யா (1989; கன்னடம்)
- நியாயங்கள் ஜெயிக்கட்டும் (1990)
- சத்ய ஜ்வாலே (1995; கன்னடம்)
- மனம் விரும்புதே உன்னை (1999)
கதை எழுத்தாளராக
[தொகு]- அன்பே ஓடி வா (1984)
- சங்கர் குரு (1987)
உரையாடல் எழுத்தாளராக
[தொகு]- ஆனந்த் (1987)
குறிப்புகள்
[தொகு]- ↑ Mohan Raman (3 January 2015). "KB: Kollywood’s Discovery Channel". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150501063135/http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece.
- ↑ 2.0 2.1 "Sivachandran". Antrukandamugam. 23 August 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
- ↑ Hindu Tamil Thisai (18 November 2019). ""பாரதிராஜா தந்த வாய்ப்பை மறுத்தேன்" – Exclusive Interview With Siva Chandran | Rewind With Ramji". பார்க்கப்பட்ட நாள் 10 April 2020 – via YouTube.
- ↑ Krishnaswamy, N. (8 June 1990). "Nyayangal Jayikkattum". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900608&printsec=frontpage&hl=en.