Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

சையது ஐதர் ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.H. Raza
சையது ஐதர் ரசா
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியர்
விருதுகள்பத்ம பூசண் 2007
லலித் கலா அகாடெமி ஃபெல்லோ, 1981

எஸ்.எச். ரசா (S. H. Raza) அல்லது சையது ஹைதர் ராஃசா (பிறப்பு 22 பெப்ரவரி, 1922- 23 சூலை, 2016), பிரான்சில் 1950 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்தாலும் வலுவான இந்திய பிணைப்புகளைப் பராமரிக்கும் ஓர் இந்திய ஓவியர் ஆவார்.

அவரது ஓவியங்கள் பெரும்பாலும் எண்ணெய் அல்லது அக்ரிலிக் வண்ணங்களால் இந்திய பிரபஞ்சவியல் மற்றும் மெய்யியல் படிமங்களைக் கொண்ட நாயகரில்லா (abstracts) ஓவியங்களாகும்.[1][2] அவருக்கு 1981 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் லலித்கலா அகாடெமியின் ஆய்வாளர் விருதுகள் வழங்கப்பட்டன.[3] பின்னர் 2007 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4].

அவரது ஓவியம் ஒன்று திசம்பர் 2006 ஏலமொன்றில் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.[5].

இளமை வாழ்வும் கல்வியும்

[தொகு]

சையது ஐதர் ரசா பெப்ரவரி 22,[6], 1922 அன்று பபாரியா[7], மத்தியப்பிரதேச மாநிலத்தில் வனத்துறை அதிகாரி சையது மொகமது ராஃசி மற்றும் தஹிரா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார்.[8][9] தமது 12ஆவது அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். தமது 13வது அகவையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தமோ என்னும் நகருக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[10][11].

பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து நாக்பூர் நகரில் உள்ள நாக்பூர் கலைப் பள்ளியிலும், (1939-43) பின்னர் மும்பையிலுள்ள சர் ஜே.ஜே கலைப் பள்ளியிலும் (1943-47) ஓவியம் பயின்றார்.[12] பிரான்சின் தலைநகர் பாரிசிலுள்ள இகோல் நேசனெல் சுப்பீரியர் தே ப்யூசார்ட்ஸ் கலைப்பள்ளியில் 1950-1953 ஆண்டுகளில் பிரான்சு அரசு உதவித்தொகையில் பயின்றார்.[13] ஐரோப்பாவில் மிகுதியாக பயணம் செய்து தமது படைப்புகளை காட்சிப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டு பிரீ டி லா கிரிடிக் (Prix de la critique) என்னும் விருதினை முதல் பிரெஞ்சல்லாதவராகப் பெறும் பேறு பெற்றார்.[11].[14].

மணவாழ்வு

[தொகு]

அவருடன் இகோல் தே ப்யூசார்ட்சில் கூடப் படித்த ஜானைன் மொங்கில்லத் என்ற ஓவியர் மற்றும் சிற்பவியலாளரிடம் மனதை பறிகொடுத்த சையது 1959 ஆம் ஆண்டு அவரை மணம் புரிந்தார். தமது துணைவியாரின் அன்னையின் விருப்பத்திற்கிணங்க பிரான்சிலேயே வசிக்கவும் உடன்பட்டார்.[15]. ஏப்ரல் 5, 2002 அன்று பாரிசில் ஜானைன் மரணமடைந்தார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Painting is like sadhana... டி என் ஏ இந்தியா, செப்டம்பர் 18, 2005.
  2. Artst Details பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம் Raza at serigraphstudio.com.
  3. Lalit Kala Ratna Profiles அலுவல்முறை விருதுபெற்றோர் பட்டியல்
  4. பத்ம பூசண் விருது பெற்றோர்
  5. இந்திய நாயகர்கள் S. H. Raza at iloveindia.com.
  6. Syed Haider Raza turns 85 பரணிடப்பட்டது 2007-04-10 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Feb 21, 2007.
  7. Biography பரணிடப்பட்டது 2008-01-08 at the வந்தவழி இயந்திரம் shraza.net, the Official website.
  8. Artist Bio பரணிடப்பட்டது 2008-03-06 at the வந்தவழி இயந்திரம் Raza Retrospective 2007, New York.
  9. Profiles பரணிடப்பட்டது 2009-01-30 at the வந்தவழி இயந்திரம் S H Raza at delhiartgallery.com.
  10. Profile of the Month பரணிடப்பட்டது 2011-04-21 at the வந்தவழி இயந்திரம் Sayed Haider Raza at indianartcircle.com.
  11. 11.0 11.1 Artist Summary Sayed Haider Raza at artfact.com.
  12. "Artist Background". Archived from the original on 2005-02-09. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
  13. Artist Directory பரணிடப்பட்டது 2008-03-04 at the வந்தவழி இயந்திரம் S H Raza at art.in.
  14. Profile பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம் S. H. Raza at vadehraart.com.
  15. Hindustan Times Master strokes, HT City, The Arts, p.10, February 23, 2008.
  16. Janine Mongillat பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Apr 09, 2002.

மேலும் படிக்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஐதர்_ராசா&oldid=3728815" இலிருந்து மீள்விக்கப்பட்டது