ஜே. பி. எஸ். ஹால்டேன்
ஜே. பி. எஸ். ஹால்டேன் J. B. S. Haldane அரச கழக ஆய்வாளர் | |
---|---|
1914 இல் ஹால்டேன் | |
பிறப்பு | இங்கிலாந்து ஆக்சுபோர்டு | 5 நவம்பர் 1892
இறப்பு | 1 திசம்பர் 1964 (அகவை 72)
இந்தியா, புவனேசுவரம் |
வாழிடம் | |
குடியுரிமை |
|
துறை | |
பணியிடங்கள் | |
கல்வி | ஏடன் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | புதுக் கல்லூரி, ஆக்ஸ்போர்ட் |
Academic advisors | பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு |
முனைவர் பட்ட மாணவர்கள் | |
அறியப்படுவது | ஓபரின்-ஹால்டேன் கருதுகோள் மலேரியா கோட்பாடு மக்கள் மரபியல் நொதியம் நியோ-டார்வினியம் |
விருதுகள் |
|
துணைவர் |
|
இராணுவப் பணி | |
சேவை/ | பிரித்தானியப் படை |
சேவைக்காலம் | 1914–1920 |
தரம் | கேப்டன் |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் |
ஜான் பர்டன் சாண்டெர்சன் ஹால்டேன் (John Burdon Sanderson Haldane FRS FRS (/ˈhɔːldeɪn//ˈhɔːldeɪn/; நவம்பர் 5, 1892 – டிசம்பர் 1, 1964)[1] என்பவர் பிரிட்டனில்-பிறந்த ஒரு அறிவியலாளர் ஆவார். இவர் உடலியங்கியல், மரபியல், பரிணாம உயிரியல், கணிதம் ஆகியவற்றின் ஆய்வுகளில் இவரது பணிக்காக அறியப்பட்டார். மேலும் இவர் புள்ளியியல் மற்றும் உயிரியல் துறைகளில் புதுமையான பங்களிப்பை செய்தார். இவரது தந்தை ஜான் ஸ்காட் ஹால்டேன் ஒரு புகழ்வாய்ந்த அறிவியலாளராவார். ஹால்டேன் ஒரு சமூகவுடமைவாதி, மார்க்சியர், இறைமறுப்பாளர், மனிதாபிமானியாவார். 1956 இல் இங்கிலாந்தை விட்டு வெளியேறிய இவர் இந்தியாவில் வாழ்ந்து, 1961 இல் இந்திய குடிமகனாக மாறினார்.
1915 இல் அவரது முதல் ஆய்வறிக்கையானது பாலூட்டிகளுக்கிடையில் மரபணு தொடர்பு இருப்பதை நிரூபித்தது. இதன் விளைவாக, மெண்டலின் விதிகள் மற்றும் டார்வினிய பரிணாம விதியான இயற்கைத் தேர்வு ஆகியவற்றை ஐக்கியப்படுத்தி, நவீன பரிணாம வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. 1929 ஆம் ஆண்டில் எயோஜனீசிஸ் குறித்த அவரது கட்டுரை "ப்ரிமோர்டியல் சூப் சூத்திரத்தை" அறிமுகப்படுத்தியது, மேலும் அது வாழ்க்கைச் சூழலின் வேதியியல் தோற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக மாறியது. ஈமோஃபீலியா மற்றும் நிறக்குருடு ஆகியவை குறித்த மனித உயிரணு வரைபடங்களை ஹேல்மேன் உருவாக்கினார். ஹால்டேனின் விதிகள் உயிரின இரத்தம் உறையாமை, மலட்டு எச்சம், கலப்பினம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துகிறது.[2][3] மலேரியாவுக்கு சில தடுப்பு மருந்துகளை இவர் சரியாக முன்மொழிந்தார். மேலும் இவரே வெளிச் சோதனை முறை கருக்கட்டல் முறை படியெடுப்பு போன்ற கருத்துகளை முதன்முதலில் பரிந்துரைத்தவர். இவர் இறந்த பின்பு இவரது உடலை மருத்துவ ஆய்வாளர்களுக்கு அளிக்க விரும்பி அவ்வாறே செய்யப்பட்டது.[4]
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]அறிவியல் மேதை ஜே.பி.எஸ்.ஹால்டேன் கீற்று
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pirie, N. W. (1966). "John Burdon Sanderson Haldane. 1892–1964". Biographical Memoirs of Fellows of the Royal Society 12 (0): 218–249. doi:10.1098/rsbm.1966.0010.
- ↑ Turelli, M; Orr, HA (1995). "The dominance theory of Haldane's rule". Genetics 140 (1): 389–402. பப்மெட்:7635302.
- ↑ Haldane, J. B. S. (1922). "Sex ratio and unisexual sterility in hybrid animals". Journal of Genetics 12: 101–109. doi:10.1007/BF02983075.
- ↑ Yount, Lisa (2003). A to Z of Biologists. New York, NY: Facts on File, Inc. pp. 113–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0917-6.