Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

டோனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனுஸ்
ஆட்சி துவக்கம்2 நவம்பர் 676
ஆட்சி முடிவு11 ஏப்ரல் 678
முன்னிருந்தவர்இரண்டாம் ஆதேயோதாத்துஸ்
பின்வந்தவர்ஆகத்தோ
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
இறப்பு(678-04-11)11 ஏப்ரல் 678
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு

திருத்தந்தை டோனுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 2 நவம்பர் 676 முதல் 11 ஏப்ரல் 678 வரை ஆட்சி செய்தவர் ஆவார். இவரின் தந்தை உரோமை நகரத்தினரான மௌரிசியுஸ் என்பவர் ஆவார். இத்திருத்தந்தையைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை.

ஆட்சிகால செயல்பாடுகள்

[தொகு]

இவர் தனது ஆட்சியில் புனித பேதுரு பேராலயம் எதிரே உள்ள இடத்தை வெள்ளை பளிங்கு கற்களால் பாதை அமைத்தார். உரோமை நகரில் அமைந்துள்ள ஆலயங்கள் பலவற்றையும் குறிப்பாக புனித பவுல் பேராலயத்தை சீரமைத்தார்.

இவரின் ஆட்சியில் இரிபாரிதுஸ் என்னும் இரவேனா நகரின் பேராயர் திருப்பீடத்தோடு இணைந்ததால் பேராயர் மௌரூசுவினால் ஏற்பட்ட சமயப்பிளவு முடிவுக்கு வந்தது. இவரின் ஆட்சியில் நெஸ்தோரிய திரிபுக் கொள்கையாளர்களின் மடம் ஒன்று உரோமை நகரில் இருப்பது தெரியவந்ததால், அம்மடத்தில் இருந்த துறவியரை பல மடங்களுக்கு பிரித்து அனுப்பினார். மேலும் அம்மடத்தையும் உரோமை துறவிகளுக்கு கொடுத்தார்.

இவரின் ஆட்சியில் காண்ஸ்டான்டினோபிலுடன் சுமுக உறவு நிலவியது.

இவரின் ஆட்சி ஒரு வருடம், ஐந்து மாதங்கள் மற்றும் 10 நாட்கள் நிலைத்தது. இவரின் இறப்புக்குப் பின்பு இவர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை இரண்டாம் டோனுஸ் என்னும் பெயர் முக்கலத்தில் சில அதிகாரப்பூர்வ ஏடுகளில் ஆறாம் பெனடிக்டின் பெயருக்கு அடுத்து காணக்கிடைக்கின்றது. இது டோனுஸ் மற்றும் தோம்னுஸ் என்னும் பெயர்களுக்கிடையே நிலவிய குழப்பத்தால் ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Levillain, Philippe (2002). The Papacy. New York: Routledge. p. 1065. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-92228-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
676–678
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனுஸ்_(திருத்தந்தை)&oldid=3214827" இலிருந்து மீள்விக்கப்பட்டது