தெக்கினீசியம்(III) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெக்கினீசியம் முக்குளோரைடு, தெக்கினீசியம் டிரைகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
1255775-02-0 | |
ChemSpider | 26946114 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Cl3Tc | |
வாய்ப்பாட்டு எடை | 204.35 g·mol−1 |
தோற்றம் | கருப்பு திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெக்கினீசியம்(III) குளோரைடு (Technetium(III) chloride) என்பது TcCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தெக்கினீசியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மத்தின் டெக்னீசியம் இரண்டு வகைகள் அறியப்படுகின்றன. α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் டைதெக்கினீசியம்(III) டெட்ரா அசிட்டேட்டு டைகுளோரைடுடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கருப்பு நிறத் திடப்பொருளாக உருவாகிறது. C3v சமச்சீருடன் முக்கோண அமைப்பும் Tc3Cl9 அலகுகளும் கொண்ட ஈரெண்முகக் கட்டமைப்பில் α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு காணப்படுகிறது. ஒவ்வொரு Tc அணுவும் அருகிலுள்ள இரண்டு Tc அணுக்களுடனும் ஐந்து குளோரைடு ஈந்தணைவிகளுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Tc-Tc பிணைப்பு நீளம் 2.44 ஆங்சுட்ராங்கு அலகுகளாகும். Tc-Tc பிணைப்பு தூரங்கள் இரட்டைப் பிணைப்பு Tc அணுக்களைக் குறிக்கின்றன. Tc3Cl9 இரேனியம் ஒப்புமையான டிரையிரேனியம் நோனாகுளோரைடுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது.[1]
β-தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மமானது TcCl3 தெக்கினீசியம் உலோகத்திற்கும் குளோரின் வாயுவிற்கும் இடையிலான வினையால் பெறப்படுகிறது. இதன் கட்டமைப்பு MoCl3 மற்றும் ReCl3 போன்ற விளிம்பு-பகிர்வு எண்கோணங்களின் எல்லையற்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது. பிணைப்பு இடைவெளிகள் உலோக-உலோக பிணைப்பைக் குறிக்கின்றன. α-TcCl3 சேர்மத்தை விட குறைவான நிலைப்புத் தன்மை கொண்ட β-தெக்கினீசியம்(III) குளோரைடு மெதுவாக α- வகைக்கு மாறுகிறது..[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Poineau, Frederic; Johnstone, Erik V.; Weck, Philippe F.; Kim, Eunja; Forster, Paul M.; Scott, Brian L.; Sattelberger, Alfred P.; Czerwinski, Kenneth R. (2010). "Synthesis and Structure of Technetium Trichloride". Journal of the American Chemical Society 132 (45): 15864–5. doi:10.1021/ar400225b. பப்மெட்:24393028.