தென்கிழக்கு சீனா
தென்கிழக்கு சீனா (South East China, China Southeast) என்பது சீன அரசின் நிலஎல்லைப் பகுதிகளில் ஒன்றாகும். சீனாவின் கடற்படையினரும், வர்த்தகர்களும் இப்பகுதியில் இருந்தே உருவாகியுள்ளனர். எனவே, பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதியாக இருக்கிறது. மேலும், சீனாவின் தாவர வளங்களைக் குறிக்க, இச்சொல் பயன்படுகிறது.[1] இந்த எல்லைக்குள் அன்ஹுயி மாகாணம், புஜியான் மாகாணம், ஜியாங்சி மாகாணம், செஜியாங் மாகாணம் ஆகிய மாகாணங்களும், தன்னாட்சிப் பகுதியான ஆங்காங் பகுதியும், திபெத் தன்னாட்சிப் பகுதியும், சியாங்சு,மக்காவு, ஆய்னான், ஆய்னான், ஆய்னான், குவாங்டொங், குவாங்ஷி, ஆய்னான் ஆகியன, இத்திசைப் பகுதியிலுள்ளன. புலம் பெயர்ந்த மக்கள் அதிகம் வாழும் சீனப் பகுதியாகத் திகழ்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழும் சீனர்களில் பெரும்பாலோனர், குவாங்டொங் பகுதியிலிருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் மொழி கண்டோனீயம் ஆகும். தைவான் நாட்டு சீனர்களில் பெரும்பான்மையர் புஜியான் மாகாணம் வழித்தோன்றல்களாகவே இருக்கின்றனர்.[2]