தோக்ரி மொழி
Appearance
தோக்ரி (डोगरी or ڈوگرى) இந்தியாவின் ஜம்மு காசுமீர் மற்றும் பாக்கிஸ்தானில் 50 இலட்சம் பேரால் பேசப்படும் ஒரு மொழியாகும்.[1] இது ஒர் இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்கள் தோக்ராக்கள் என அழைக்கப்படுகின்றனர். [2]இம்மொழி பகாரி என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலும், பஞ்சாப்பின் வடக்குப் பகுதியிலும் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கின்றனர்.[3] இம்மொழியின் எழுத்து வடிவம் தாக்ரி (Takri) ஆகும். இது காஷ்மீர் பகுதியிலுள்ள சாரதா (Śāradā script) எழுத்து வடிவத்தை ஒத்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharma, Sita Ram (1992). Encyclopaedia of Teaching Languages in India, v. 20. Anmol Publications. p. 6.
- ↑ Narain, Lakshmi (1965). An Introduction to Dogri Folk Literature and Pahari Art. Jammu and Kashmir Academy of Art, Culture and Languages.
- ↑ Billawaria, Anita K. (1978). History and Culture of Himalayan States, v.4. Light & Life Publishers.