படித்தால் மட்டும் போதுமா
படித்தால் மட்டும் போதுமா | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணன் |
கதை | தாராசங்கர் பாண்டோபாத்யாயா (கதை) ஆரூர்தாஸ் (வசனம்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. பாலாஜி சாவித்திரி ராஜசுலோசனா எம். ஆர். ராதா எஸ். வி. ரங்கராவ் எஸ். வி. சகஸ்ரநாமம் ப. கண்ணாம்பா எம். வி. ராஜம்மா |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல்ராவ் |
விநியோகம் | ரங்கநாதன் பிக்சர்சு |
வெளியீடு | 14 ஏப்ரல் 1962 |
மொழி | தமிழ் |
படித்தால் மட்டும் போதுமா 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், கே. பாலாஜி, சாவித்திரி, ராஜசுலோசனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஏ. பீம்சிங் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர்.
இந்தத் திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. இத்திரைப்படம் வங்காள மொழித் திரைப்படமான "நா" வின் தழுவலாகும்.("நா" திரைப்படம் தராசங்கர் பாண்டியோபாத்யாய் எழுதிய "நா" என்ற நாவலின் தழுவல்).
கதை
[தொகு]படத்தில் பாலாஜி, சிவாஜி கணேசன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாவர். தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். இருவருக்கும் திருமணம் செய்யும் நோக்கத்துடன் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள். அவளை அடைய திட்டம் போட்டு, ஒரு மொட்டைக் கடிதம் வழியே அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். இருவருக்கம் திருமணம் நடந்துவிடுகிறது. ஆனால், இதன்பின்னர் தம்பியின் வாழ்க்கையில் புயல்வீசுகிறது. படிக்காதவனை அவனுடைய மனைவியே விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் தம்பிக்கு அண்ணனின் சூழ்ச்சி தெரிந்துவிடுகிறது. சாவித்திரியும் ராஜ சுலோசனாவும் மனைவிகளாகவும் நடித்திருக்கின்றனர். அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை முடிவு.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | பாத்திரம் |
---|---|
சிவாஜி கணேசன் | கோபால் |
கே. பாலாஜி | ராஜு |
சாவித்திரி | சீதா |
ராஜசுலோசனா | மீனா |
எம். ஆர். ராதா | கைலாசம் |
எஸ். வி. ரங்கராவ் | ராவ்பகதூர் |
எஸ். வி. சகஸ்ரநாமம் | சமீந்தார் |
ப. கண்ணாம்பா | மங்களம் |
எம். வி. ராஜம்மா | |
முத்துராமன் | மூர்த்தி |
ஓ. ஏ. கே. தேவர் | வழக்கறிஞர் |
ஏ. கருணாநிதி | |
சி. கே. சரஸ்வதி | ஆண்டாள் |
மனோரமா | |
ராதாபாய் | மூர்த்தி, சீதாவின் தாய் |
பாடல்கள்
[தொகு]- ஓகோகோகோ மனிதர்களே (டி. எம். சௌந்தரராஜன்)
- பொன் ஒன்று கண்டேன் (டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
- காலம் செய்த கோமாளி தனத்தில் (பி. பி. ஸ்ரீனிவாஸ், ராகவன், ஜி. கே. வெங்கடேஷ்)
- தண்ணிலவு தேனிறைக்க (பி. சுசீலா)
- நல்லவன் எனக்கு நானே நல்லவன் (டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
- நான் கவிஞனும் இல்லை (டி. எம். சௌந்தரராஜன்)
- அண்ணன் காட்டிய வழியம்மா (டி. எம். சௌந்தரராஜன்)
உசாத்துணை
[தொகு]- 1962 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- சாவித்திரி நடித்த திரைப்படங்கள்
- ஏ. பீம்சிங் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- பி. கண்ணாம்பா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. ரங்கராவ் நடித்த திரைப்படங்கள்