Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பனிச்சறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிச்சறுக்கு என்பது பனி நடைக் கட்டைகளை பொருந்திய காலணிகளை அணிந்து பனியின் மேலே சறுக்கிய வண்ணம் பயணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாகும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பனிச்சறுக்கு இராணுவ பயன்பாடுகளுக்கும், மிகுந்த பனிப்பொழிவு உள்ள இடங்களில் பயணிப்பதற்கும் பயன்படுகிறது. 1860 வரை பனிச்சறுக்கு, பனி அதிகமுள்ள இடங்களில் பயணிப்பதற்காகவே பயன்பட்டு வந்தது. 1860க்கு பிறகு பனிச்சறுக்கானது பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது[1]. பலவிதமான போட்டி பனிச்சறுக்கு நிகழ்வுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மற்றும் பன்னாட்டு பனிச்சறுக்கு கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குளிர் நாடுகளில் இது ஒரு பிரபல விளையாட்டு ஆகும். குளிர்பிரதேச பழங்குடிகளே பனிச்சறுக்கு பற்றி அறிந்திருந்தனர்.

வரலாறு

[தொகு]

மிகப்பழமையான, மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட பனிச்சறுக்கு தற்போதைய நார்வே மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பகுதிகளில் நடந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் நார்லேண்ட் பகுதியில் உள்ள ரூடியில் அமைந்துள்ள, கிமு 5000 சார்ந்த பழமையான சிற்பங்கள், ஒற்றை பனிச்சறுக்கு குச்சியுடன் பனிச்சறுக்கு மனிதனை சித்தரிக்கின்றன. முதல் பழமையான பனிச்சறுக்கு ஸ்வீடனில் 4500 அல்லது 2500 கிமு-வில் நடந்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Saur, Lasse (1999): Norske ski - til glede og besvær. Research report, Høgskolen i Finnmark.
  2. "Chronology timeline, North American ski mountaineering backcountry skiing". Archived from the original on 2012-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-20.
  3. "Aspenhistory.Org". Archived from the original on 2011-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சறுக்கு&oldid=3562424" இலிருந்து மீள்விக்கப்பட்டது