Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Aasaidivya

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னம்பிக்கை.. பொதுவாக தன்னம்பிக்கை என்பது தன்மீது தான் வைத்துள்ள நம்பிக்கையைதான் தன்னம்பிக்கை என்கிறார்கள்.

என்னால முடியும்ங்குறது தன்னம்பிக்கை என்னால் மட்டும்தான் முடியுங்குறது தலைகனமுன்னு சூர்யா ஒரு படத்துல சொல்லுவாரு.சரி.

நம் வாழ்விலோ அல்லது தம் முயற்சியிலோ எடுத்த காரியத்தில் வெற்றிபெற முடியும் என நம்புவது தன்னம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

என்னால முடியுங்குறது தன்னம்பிக்கையா?

ஆனால் என்னை பொருத்தவரை தன்னம்பிக்கைக்கு வேறு காரணத்தை சொல்வேன்.

பொதுவாக மனிதனுக்கு நல்லவன்-கெட்டவன், திறமைசாலி-ஏமாளி, தைரியமானவன்-கோழை என்ற பண்புகள் இருக்கிறது. இந்த பண்புகள் யார் யாருக்கு வழங்குகிறார்கள். அதாவது பிறர் நமக்கு வழங்குகிறார்கள்.இது இப்படியே இருக்கட்டும்..

நாம் நல்லன் என்று ஊர் சொல்கிறது என்றால் உண்மையிலேயே நாம் நல்லவனா?

அனைத்து மனிதர்களுமே தன்னுடைய நல்லதை மட்டுமே வெளியில் வெளிபடுத்துகிறார்கள்.கெட்டதை வெளிபடுத்தாமல் மறைக்கிறார்கள் இதில் ஒரு சிலரே விதிவிலக்கு.

ஆனால் பெரும்பாலானோர் நல்லதை வெளிபடுத்தி தன்னை நல்லனாக்கி கொள்கிறார்கள்..

நமக்கு நல்ல பழக்கம் இருக்கிறது என்றால் வெளியே சொல்வோம். கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் வெளியே சொல்வோமா?மாறாக அந்த கெட்ட விசயத்தை நியாயபடுத்துவோம். உதாரணமாக மது அருந்துவதை இன்று பலபேர் கெட்டவிசயமாக கருதுவதில்லை.

நல்லவற்றையே வெளிபடுத்துவதால் சமுதாயத்தில் அனைவரும் யோக்கியர்கள் போல நிகழும்..

அடுத்தவர்களுக்கு தெரியாதவரை நாம் செய்யும் தவறுகள் எல்லாம் நல்லதே,சரியே...

நமது மனது நம்மை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் அதற்கு பெயர்தான் குற்றவுணர்ச்சி. அதாவது நல்லதெல்லாம் வெளிபடுத்துவதால் வெளிஉலகிற்க்கு நீ நல்லவன். கெட்டதெல்லாம் என்னுள்ளே வைத்திருப்பதால் நான் உன்னிடம் நீ எப்படிபட்ட கெட்டவன் என்பதை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.அதற்கு பெயர்தான் மனசாட்சி.

நாம் ஒருவருக்கு கெடுதல்செய்ய முயற்சித்து அது நன்மையில் முடிந்தால் வெளிபார்வையில் நீங்கள் நல்லர்.அதே மனசாட்சிக்கு... அதேபோல் ஒழுக்கத்தில் நல்லவனாக வெளிபடுத்துவீர்கள் ஆனால் மனசாட்சி சொல்லும்,நீங்கள் எவ்வளவு ஒழுக்கங்கெட்டவர் என்று..

அன்பானவராக வெளியில் காட்டி கொள்வீர்கள் ஆனால் மனசாட்சி சொல்லும் நீங்கள் எவ்வளவு அன்பற்றவர்னு.

அன்பற்றவர்னு காட்டி கொள்வீர்கள் மனது சொல்லும் நீங்கள் எவ்வளவு அன்பானவர்னு.(இது பெரும்பாலும் தாய்,தந்தை,குரு, தெய்வம் என்ற முதற்கடவுள்களுக்கு மட்டும் பொருந்தும்)

பணிவானவர்னு காட்டிகொள்வீர்கள் நீங்கள் எவ்வளவு திமிர் பிடித்தவர்னு மனசாட்சி சொல்லும்.

அறிவாளியாக காட்டி கொள்வீர்கள் மனசாட்சி சொல்லும் நீங்கள் எவ்வளவு முட்டாள் என.

ஏமாளி என காட்டி கொள்வீர்கள் மனசாட்சி சொல்லும் நீங்கள் எவ்வளவு சாமர்த்தியவாதினு.

சாமர்த்தியவாதினு காட்டிகொள்வீர்கள் மனது சொல்லும் நீங்கள் எவ்வளவு ஏமாளினு.

நாணயமானவராக உங்களை வெளிபடுத்துவீர்கள் ஆனால் மனசாட்சி சொல்லும் நீங்கள் எவ்வளவு நாணயமற்றவர் என.

பொதுநலனுக்காக பாடுபடுவதாக வெளியில் சொல்வீர்கள் ஆனால் மனசாட்சி சொல்லும் நீங்கள் அதில் எவ்வளவு சுயநலவாதிஎன..

இப்படி மனது சொல்லும் சாட்சியில் நீங்கள் குறைவாகவோ அல்லது மனது நீங்கள் நல்லவர் என சொன்னால் அதுதான் தன்நம்பிக்கை..

அதாவது தன்(மனது)நம்பிக்கை வைக்கிறது. உங்கள் செயல்களை ஆதரிக்கிறது. இதனால் நிம்மதி கொள்கிறீர்கள் பல நேரங்களில்...

நீங்கள் செய்த காரியம் ஒன்று வெளியில் கெட்டதாக பார்க்கப்பட்டு அதை நல்லநோக்கத்துக்காக செய்திருந்தால் அந்த மனது உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். அந்த குற்றசாட்டைகூட புண்ணகையோடு கடப்பீர்கள்.

இதே கெட்டது செய்து உங்களை மற்றவர்கள் விமர்சித்தால் அவர்களிடம் வாக்குவாதம் செய்வீர்கள்.

எப்படியாவது நல்லவனாக காட்டி கொள்ளமுயற்சிப்பீர்கள்.. நீங்கள் நல்லவனாக இருப்பது முக்கியமில்லை நல்லவனாக உங்களை காட்டி கொள்வதுதான் முக்கியம்.

ஒரு வகையில் அதுவும் சமுதாயத்திற்கு நல்லதுதான்.ஏன்தெரியுமா ?

மனிதர்களில் நல்லவன் யார் கெட்டவன் யார் என வேறுபடுத்தி பார்ப்பதில் கடினம் என்றாலும் அனைவரையுமே நல்லவர்களாக பார்ப்பார்கள்.எனவே தாமும் நல்லவனாகவே இருக்க வேண்டும் என முயல்வார்கள்.. இதைதான் நல்லவற்றை பரப்புவோம் என நாம் செய்து கொண்டு இருக்கிறோம்..

ஒரிருவர் கெட்டவிசயங்களில் வெளியில் மாட்டிக்கொள்ளும்போது அனைவரும் சேர்ந்து வசைபாடுகிறோம் அவன் அயோக்கியன் என்று.நாம் எவ்வளவு யோக்கியன் என்று நம்மை நெருங்கியவர்களுக்கு ஓரளவு தெரிந்தாலும் நம் மனதிற்கு அனைத்துமே தெரியும்.

எனவே தன் மனசாட்சி சொல்லுபடி நாம் நல்லவன் என்றால் அவன்தான் தன்னம்பிக்கை உடையவன்.

நான்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வாழ்வில்,எடுத்து கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றெதெல்லாம்(மனசாட்சியை அகற்றி) தன்னம்பிக்கை கிடையாது..அயோக்கியதனம்.அதைதான் தன்னம்பிக்கை என நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

கட்டுரையை முடிக்கும்போது சிலசமங்களில் அன்புடன் என்று எழுதுவேன்.

அன்புடன் என்பதை மாற்றி இப்படிக்குனு முடிக்கிறேன்.காரணம் இதில் உள்ள அனைவரையும் அன்பாக பார்க்கிறேன் என்றால் அது வெளிஉலகிற்கு நல்லவனாக காட்டி கொள்கிறேன் எனவே மனசாட்சி தடுத்து என்னை இப்படிக்கு என எழுத சொல்கிறது.

இப்படிக்கு, துரை.பெருமாள்முருகன்.

Start a discussion with Aasaidivya

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aasaidivya&oldid=4169943" இலிருந்து மீள்விக்கப்பட்டது