பாசிலிஸ்
பாசிலிஸ் Φασηλίς (in கிரேக்கம்) | |
---|---|
முதன்மைச் சாலை | |
இருப்பிடம் | டெகிரோவா, அந்தால்யா மாகாணம், துருக்கி |
பகுதி | லைசியா |
ஆயத்தொலைகள் | 36°31′25″N 30°33′08″E / 36.52361°N 30.55222°E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டுநர் | ரோடியன் குடியேற்றவாசிகள் |
கட்டப்பட்டது | 700 BC |
காலம் | Archaic to High Medieval |
Associated with | Theodectes |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | Ruined |
உரிமையாளர் | Public |
பொது அனுமதி | Yes |
இணையத்தளம் | Phaselis Archaeological Site |
பாசிலிஸ் (Phaselis, பண்டைக் கிரேக்கம்: Φασηλίς ) என்பது பண்டைய லைசியாவின் கடற்கரையில் இருந்த கிரேக்க மற்றும் ரோமானிய நகரமாகும். இதன் இடிபாடுகள் தற்போதைய துருக்கியின் அந்தால்யா மாகாணத்தின் கெமர் மாவட்டத்தில் உள்ள நவீன நகரமான டெகிரோவாவின் வடக்கே அமைந்துள்ளன. இது பே மலைகள் மற்றும் ஒலிம்போஸ் தேசிய பூங்காவின் காடுகளுக்கு இடையில், சுற்றுலா நகரமான கெமருக்கு தெற்கே 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொலைவில், அண்டலியா-கும்லூகா நெடுஞ்சாலையின் 57வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. பாசிலிஸ் மற்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பிற பண்டைய நகரங்களுக்கும் தினசரி கடலில் படகு சவாரி மூலம் செல்லலாம்.
வரலாறு
[தொகு]கி.மு. 700 இல் ரோடியன்களால் இந்த நகரம் உருவாக்கப்பட்டது. இரண்டு துறைமுகங்கள் பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், இது கிழக்கு லைசியாவின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும், கிரேக்கம், ஆசியா, எகிப்து, போனிசியாவிற்கு இடையேயான வர்த்தக மையமாகவும் மாறியது. இருப்பினும் இது லைசியன் கூட்டணியைச் சேர்ந்தது அல்ல. பாரசீகர்கள் சின்ன ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் இந்த நகரம் கைப்பற்றப்பட்டது. கிமு 468 இல், ஏதெனிய தளபதி சிமோன் நகரத்தைத் தாக்கினார். பின்னர் இது டெலியன் கூட்டணியில் இணைக்கப்பட்டது. [1] பின்னர் இது பேரரசர் அலெக்சாந்தரால் கைப்பற்றப்பட்டது.
அலெக்சாந்தரின் மரணத்திற்குப் பிறகு, இந்த நகரம் கி.மு. 209 முதல் கி.மு. 179 வரை எகிப்தியர்களின் கைகளில் தாலமி வம்சத்தின் கீழ் இருந்தது. மேலும் அபாமியா ஒப்பந்தத்தின் முடிவில், ரோடியன் பேராயாவிடம், லிசியாவின் மற்ற நகரங்களுடன் இது ஒப்படைக்கப்பட்டது. கி.மு 190 முதல் முதல் கி.மு. 160 வரை இது ரோடியன் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆனால் கிமு 160 க்குப் பிறகு இது ரோமானிய ஆட்சியின் கீழ் லைசியன் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டது. ஒலிம்போசைப் போலவே, கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து இது கடற்கொள்ளையர்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மேலும் கடற்கொள்ளையர்கள் கிமு 77 அல்லது 76 இல் ரோமானிய தளபதியான பப்லியஸ் செர்விலியஸ் வாடியா இசாரிகசின் தலைமையில் தோற்கடிக்கப்படும் வரை நகரம் அவர்களின் கைவசம் இருந்தது. கிமு 42 இல் புருடசால் நகரம் ரோமின் ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்டது. கி.பி 3 ஆம் நூற்றாண்டில், துறைமுகம் மீண்டும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலின் கீழ் விழுந்தது. எனவே அது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது, அரபுக் கப்பல்களினாலும் இது மேலும் இழப்புகளைச் சந்தித்தது. 11 ஆம் நூற்றாண்டில் முற்றிலும் வறிய நிலைக்கு இது தள்ளப்பட்டது. செல்யூக் அரசமரபானது அலன்யா மற்றும் அன்டல்யா துறைமுகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியபோது, பாசிலிசில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க துறைமுகமாக இல்லாமல் போனது.
பாசிலிசியில் ஏதெனாவின் கோயில் இருந்தது, அங்கு அக்கீலியசின் ஈட்டி காட்சிப்படுத்தப்பட்டது. இது கவிஞரும் பேச்சாளருமான தியோடெக்டெசின் பிறப்பிடமாகும். இது அதன் ரோஜாக்களுக்கும் புகழ் பெற்றது, அதிலிருந்து சாராம்சம் பிரித்தெடுக்கப்பட்டது. [2]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- லாக்ரிடஸ், ஒரு கிரேக்க அறிஞர்
- கிரிடோலஸ், ஒரு கிரேக்க பெரிபாட்டிக் தத்துவவாதி
- தியோடெக்டெஸ், ஒரு கிரேக்க பேச்சாளர் மற்றும் துன்பியல் கவிஞர்
பாசிலிஸ் இன்று
[தொகு]பாசிலிசில் தற்போது மூன்று துறைமுகங்களைக் கொண்டுள்ளது: 'வடக்கு துறைமுகம்', 'போர் துறைமுகம்', 'பாதுகாக்கப்பட்ட (சூரியன்) துறைமுகம்' ஆகியவை ஆகும். அவற்றில் கடைசியானது தற்போது மிக முக்கியமானதாக உள்ளது. 24 மீட்டர் அகலமுள்ள பழமையான தெரு நகரின் நடுவில் செல்கிறது. தெருவின் தெற்குப் பகுதியில் 'ஹட்ரியன் வாட்டர்வே கேட்' உள்ளது. தெருவின் ஓரங்களில் கடைகளின் இடிபாடுகள் உள்ளன. இவற்றின் அருகே ரோமானிய குளியல், அகோராக்கள் மற்றும் நடக அரங்குகள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்களின் இடிபாடுகள் உள்ளன. இந்த கட்டமைப்புகள் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு ஏராளமான கல் சவப்பெட்டிகளும் உள்ளன.
-
பாசிலிஸ் கால்வாய்ப்பாலம்
-
பாசிலிஸ் பெரிய குளிப்புத் தொட்டி
-
பாசிலிஸ் பெரிய குளிப்புத் தொட்டி
-
பாசிலிஸ் பிரதான தெரு
-
ஹட்ரியன் கேட் அருகே ஃபேஸ்லிஸ் அலங்காரம்
-
பாசிலிஸ் ஆட்ரன் வாயில்
-
பாசிலிஸ் வடக்கு துறைமுகம்
-
பாசிலிஸ் வடக்கு துறைமுகம்
-
பாசிலிஸ் தெற்கு துறைமுகம்
-
தெற்கு துறைமுகத்தில் இருந்து பாசிலிசின் காட்சி
-
பாசிலிஸ் டெட்ராகோனல் அகோர
-
பாசிலிஸ் முன் டெட்ராகோனல் அகோரா
-
பாசிலிஸ் சிறிய குளிப்புத் தொட்டி
-
பாசிலிஸ் சிறிய குளிப்புத் தொட்டி மற்றும் நாடக அரங்கம்
-
பாசிலிஸ் நாடக அரங்கம்
-
டோமிஷியன் அகோராவுடன் ஃபேஸ்லிஸ் தெரு
-
பாசிலிசில் டொமைத் அகோராவின் நுழைவு வாயில்
-
பாசிலிஸ் டொமைத் அகோரா
-
பாசிலிஸ் அணிவகுப்பு சதுப்பு பகுதி