Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ் டிரேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் பிரான்சிஸ் டிரேக்
பக்லண்டு மாளிகையில் பிரான்சிசு டிரேக்
16-ஆம் நூ. ஓவியம்
பிறப்புஅண். 1540 (1540)
தவிஸ்தோக், செவன், இங்கிலாந்து
இறப்புசனவரி 28, 1596(1596-01-28) (அகவை 55)
பனாமா
கடற் கொள்ளை தொடர்பில்
பட்டப்பெயர்எல் டிரேக் (எசுப்பானியம்), டிராக்கோ
வகைஅரச தனியார் கப்பல் வீரர்
கூட்டுஇங்கிலாந்து இராச்சியம்
இயங்கிய காலம்1563–1596
தரநிலைதுணை ஆட்மிரல்
செயற்பாட்டுக் களம்கரிபியக் கடல்
கட்டளைகள்பெலிக்கன்)
பொனவென்ச்சர்
ரிவெஞ்ச்
சண்டைகள்/ போர்கள்ஆங்கிலோ-எசுப்பானியப் போர்,
கிரேவ்லைன் சமர்
கையொப்பம்

சர் பிரான்சிஸ் டிரேக் (Francis Drake, 1540- ஜனவரி 27, 1596) ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், இங்கிலாந்து கடற்படை துணைத் தளபதி மற்றும் எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் ஸ்பானிஷ் ஆர்மடாவிற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் போர்டோ ரிக்கோவின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால் இறந்து போனார்.

அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் El Draque எனவும் இலத்தீனில் Franciscus Draco எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை[1] விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.

இளமைக்காலம்

[தொகு]

1540களில் (அவருடைய பிறந்த ஆண்டு சந்தேகத்திற்கு இடமின்றி அறியப்படவில்லை) டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். ஆனால் பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் 1581 இல் வரைந்த டிரேக்கின் ஓவியத்தின் அவருக்கு அப்போது 42 வயது என்கிறது. 1594 இல் தீட்டப்பட்ட இன்னொரு ஓவியம் அப்போது டிரேக்குக்கு 53 வயது என்கிறது. இத்தரவுகளில் இருந்து டிரேக்கின் பிறப்பு ஆண்டு 1540 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எட்மண்ட் டிரேக் கிருத்துவ புராட்டஸ்டன்டு வகுப்பைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவரது மனைவி மேரி மைல்வேய். இவர்களுக்கு 12 மகன்கள். இத்தம்பதியரின் மூத்த மகனே பிரான்சிஸ் டிரேக் ஆவார். அவரது ஞானத்தந்தையான் பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. 1549இல் நடந்த பிரேயர் புக் ரெபெலியன் எனப்படும் மத அடக்குமுறைக் கிளர்ச்சியால், டிரேக் குடும்பத்தினர் டெவோன்ஷயரில் இருந்து கெண்ட்டுக்கு தப்பியோடினர். அங்கு அவரது தந்தையார் இங்கிலாந்து கப்பற்படையில் சேர்ந்தார். பிரான்சுக்கு கப்பல்மூலமாக வாணிபம் செய்துவந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பயிற்சிபெற டிரேக்கை அவரது தந்தை அனுப்பி வைத்தார். இளைஞன் டிரேக்கின் நடத்தை கப்பலின் எஜமானுக்கு மிகவும் திருப்தி அளித்ததால், அவர் தனது கப்பலை தான் இறந்த பின்னால் டிரேக்கிடம் ஒப்படைக்க உயில் எழுதி வைத்தார்.

திருமணம்

[தொகு]

பிரான்சிஸ் டிரேக், மேரி நியுமேன் என்பவரை 1569-இல் மணந்தார். 1585-இல் எலிசபெத் சிடென்ஹம் என்பவரை இரண்டாவதாக மணந்தார். டிரேக் இறந்த பிறகு, எலிசபெத் சர் வில்லியம் கோர்டெனெய் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். டிரேக்கிற்கு குழந்தை எதுவுமில்லை என்பதால், அவரது சொத்துகளும் உடைமைகளும் அவரது உடன்பிறந்தவர் ஒருவருடைய மகனுக்குச் சேர்ந்தது.

மாலுமி

[தொகு]

டிரேக் தமது 23ஆம் வயதில், தமது உறவினரான சர் ஜான் ஹாக்கின்ஸ் என்பவருடன், புதிய உலகத்திற்கு தமது முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். அக்கப்பல் தமது உறவினரான ஹாக்கினஸ் குடும்பத்தாருக்குச் சொந்தமானது. மீண்டும் அவர் 1568-இல் ஜான் ஹாக்கின்ஸுடன் அதே கப்பலில் பயணம் செய்து மெக்சிகோவில் சான் ஜுவான் டி உலூவா துறைமுகத்தில் ஸ்பானியர்களிடம் மாட்டிக்கொண்டார். எப்படியோ ஹாக்கின்ஸுடன் தப்பித்துக் கொண்டார். அத்தோல்வியால், பழிவாங்க வேண்டும் என்று டிரேக் சபதம் ஏற்றுக்கொண்டார். அவர் 1570, 1571 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டு கடற்பயணத்தை மேற்கொண்டார்.

1572-இல் ஆங்கிலேயர்களால் ஸ்பானிஷ் மெய்ன் என்று அழைக்கப்பட்ட பனாமா இடைநிலத்தை தாக்க திட்டமிட்டார். இந்த இடத்தில் இருந்துதான், பெரு நாட்டின் தங்கம், வெள்ளி பொக்கிஷங்கள் அனுப்பப்படும். நோம்ரு டி டயஸ் என்ற நகரில் இருந்து கப்பலில் ஸ்பானியர் ஏற்றிச் செல்வர். 24.5.1572-இல் இரண்டு சிறிய கப்பல்களில் 73 பேருடன் நோம்ரு டி டயஸைக் கைப்பற்ற டிரேக் பயணமானார்.

புவியினை சுற்றி வருதல் (1577-1580)

[தொகு]
டிரேக் புவியினை சுற்றிவந்தப் பாதை

பனாமா இஸ்த்மஸ் தாக்குதலின் வெற்றிக்குப்பிறகு, 1577இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் இவரை அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் இருந்த எசுப்பனியர்களுக்கு எதிராக போர்புரிய அனுப்பினார். அவர் 15 நவம்பர் 1577 இல் பிளைமவுத் இருந்து தனது பயணத்தை துவங்கினார், ஆனால் மோசமான வானிலை அவரையும் அவரது கப்பற்படை அச்சுறுத்தியது. ஆதலால் ஃபலாமவுத், கார்ன்வாலில் தஞ்சம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அங்கிருந்து அவர்கள் கப்பலை பழுது பார்க்க பிளைமவுத் திரும்பினார்.

இப்பெரும் பின்னடைவின் பின்னர், அவர் பெலிகன் என்ற தனது கப்பலோடு மற்ற நான்கு கப்பல்கள் மற்றும் 164 ஆண்களோடு, டிசம்பர் 13 அன்று மீண்டும் புறப்பட்டார். அவர் விரைவில் ஆறாவது கப்பலாக, மேரியினை (முன்பு சாண்டா மரியா) இனைத்தார். கேப் வேர்டே தீவுகள் அருகே ஆப்பிரிக்கா கடற்கரையில் கைப்பற்றப்பட்ட என்று ஒரு போர்த்துகீசியம் வணிக கப்பல் இது. அவர் தன் மாலுமி, நூனோ டா சில்வாவை தென் அமெரிக்க கடலில் அனுபவம் மிக்கவராக இருந்ததால் தனது படையில் சேர்த்துக்கொண்டார்.

பிரான்சிஸ் டிரேக் புவியினை சுற்றி வந்த கோல்டன் ஹின்ட் கப்பலின் மாதிரி

டிரேகின் கப்பற்படையின் பெரும் ஆட்கள் பற்றாக்குரையினால் பாதிக்கப்பட்டது; அவர் தானாகவே தனது கப்பலான கிறிஸ்டோபர் மற்றும் ஸ்வான் ஆகியற்றை மூழ்கடித்தார். அட்லாண்டிக் கடப்பில் படையினர் பலரை இழந்தார். அவர் இப்போது அர்கெந்தீனா என இப்போது அழைக்கப்படும் சான் ஜூலியன் வளைகுடாவில் இவரின் கப்பல் தரைக்கட்டியது. டிராகின் படையினர் வானிலையாலும் மற்றும் குற்றவாளிகளின் எலும்புக்கூடுகளினையும் கண்டனர். அவர்கள் மேரி கப்பலின் மரம் அழுகிவருவதை அறிந்து, அக்கப்பலை கப்பல் எரித்தனர். டிரேக் மகெல்லன் நீரிணையினைக்கடப்பதற்கு முன் சான் ஜூலியனில் குளிர்காலத்தை கடத்த முடிவு செய்தார்.

இறப்பு

[தொகு]
1591இல் வரையப்பட்ட ஓவியம், டிரேக் அணிகளனையும் புதிய மரபு சின்னத்தையும் இதில் காணலாம்[2]

உயர்குடி மக்களுக்கு, இவர் தாழ்ந்த குடும்பத்தில் இருந்து இவ்வளவு உயர்ந்துள்ளதால் இவரை பிடிக்கவில்லை; எஞ்சியவருக்கோ இவரே போர்களுக்கான முக்கிய காரணம்.

—  — கொன்சாலோ கான்செலஸ் தெல் காஸ்டிலோ, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்ன்ருக்கு எழுதிய கடிதத்திலிருந்து, 1592[1]

டிரேகின் கடல் வாழ்க்கை அவரது 50 அகவைக்கும் மேல் தொடர்ந்தது. 1595ல், அவர் லாஸ் பல்மாஸ் துறைமுகப்போரில் அதனை கைப்பற்ற தவறினார். எசுப்பானிய அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போர்களில் பல தோல்விகளை தழுவினார். 1595இல் சான் ஜூவான் போர்தோரிக்கோ போரில் தோல்வியினைத்தழுவினார்.

கடலில் டிரேகின் அடக்கம்

எல் மோரோ கோட்டையிலிருந்து எசுப்பானியர்கள் டிராகின் கப்பல் அறையினை ஒரு பீரங்கி குண்டு சுட்டனர். அவர் இத்தாக்குதலிலிருந்து பிழைத்தார். ஆயினும் ஜனவரி 1596இல், இவர் இரத்தக்கழிசலால் தனது 55ஆம் அகவையில் மறித்தார்.

அவரது இறப்பினை தொடர்ந்து, ஆங்கில கப்பற்படை இப்போரிலிருந்து விலகினார். இறக்கும் முன், அவர் தனக்கு முழு கவச உடையினை அணிவிக்க வேண்டும் என்றார். அவர் போர்த்தோபெல்லோ அருகே ஒரு ஈய சவப்பெட்டியில் கடலில் புதைக்கப்பட்டார். மூழ்காளர்கள் இன்றளவும் இவரின் சவப்பெட்டியின் தேடலினை தொடர்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Cummins, John, Francis Drake: The Lives of a Hero, 1996, Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16365-7
  2. Prince's Worthies, op.cit.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_டிரேக்&oldid=2697811" இலிருந்து மீள்விக்கப்பட்டது