Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பிளஸ் விரைவுச்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளஸ் விரைவுச்சாலைகள்
PLUS Expressways
PLUS Malaysia Berhad
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை27 சூன் 1986; 38 ஆண்டுகள் முன்னர் (1986-06-27)
தலைமையகம்பெர்சாடா பிளஸ்
(Persada PLUS)
சுபாங் மாற்றுச் சாலை
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை,
பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
தொழில்துறைநெடுஞ்சாலை சலுகைகள்
பணியாளர்+ 3,500
தாய் நிறுவனம்யுஇஎம் குழு
UEM Group
இணையத்தளம்www.plus.com.my
பெட்டாலிங் ஜெயாவில் பிளஸ் நிறுவனத்தின் தலைமையகம் (2021)

பிளஸ் விரைவுச்சாலைகள் அல்லது பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (ஆங்கிலம்: PLUS Expressways; அல்லது PLUS Expressways Berhad (PEB); மலாய்: PLUS Expressways Berhad அல்லது Projek Lebuhraya Utara Selatan Berhad (PLUS) என்பது மலேசியாவில் மிகப்பெரிய நெடுஞ்சாலைக் கட்டுமான-செயலாக்க முதலீட்டு நிறுவனமாகும்.[1]

பொதுவாக, இந்த நிறுவனம் பிளஸ் (ஆங்கிலம்; மலாய்: PLUS) என்றே அழைக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் அதிவேக நெடுஞ்சாலை இயக்கச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் விரைவுச்சாலை சுங்கச் சாவடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. அத்துடன் உலகில் 8-ஆவது பெரிய விரைவுச்சாலை நிறுவனமாகவும் அறியப்படுகிறது.[2]

பொது

[தொகு]

பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் 27 சூன் 1986-இல் மலேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டது. 13 மே 1988 அன்று, அதன் பெயரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் (Projek Lebuhraya Utara Selatan Berhad) (PLUS) என மாற்றியது.[3]

29 சனவரி 2002 அன்று, பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாக மலேசிய பங்குச் சந்தையில் இணைக்கப்பட்டது.

மாநிலச் சாலைகளின் குறியீடுகள்

[தொகு]

மலேசியாவில் உள்ள மாநிலங்களில், கீழ்க்கண்டவாறு சாலைகளின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு முறையையே பிளஸ் நிறுவனமும் பயன் படுத்தி வருகிறது.

நிறுவன உறுப்பினர்களின் பட்டியல்

[தொகு]

உள்நாடு

[தொகு]
சின்னம் பெயர் அமைவு செயல்பாடு

Projek Lebuhraya Usaha Sama Berhad
உசகா சமா விரைவுச்சாலைத் திட்ட நிறுவனம்
Projek Lebuhraya Usaha Sama Berhad (PLUS)
2011 மலேசியாவின் அனைத்து விரைவுச்சாலைகள்:

E1 E2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை
E1 AH2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் (மலேசியா) & AH141 கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை
E2 AH2 மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம்
E29 சிரம்பான்–போர்டிக்சன் விரைவுச்சாலை
AH2 மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
2 மலேசிய கூட்டரசு சாலை 2
E6 AH2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
E3 AH143 மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் & இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை
E15 AH140 பட்டர்வொர்த்–கூலிம் விரைவுச்சாலை
E36 பினாங்கு பாலம்


PLUS Helicopter Services Sdn. Bhd.

பிளஸ் உலங்கூர்தி சேவைகள் நிறுவனம்
PLUS Helicopter Services Sdn Bhd (PLUS Heli)
2010 உலங்கூர்தி சேவைகள்
தெராஸ் தொழில்நுட்ப நிறுவனம் 1994 தொழில்நுட்ப சேவைகள்
தொட்டு செல் 1996 மின்னியல் கட்டண முறை (Electronic Toll Collection) Touch 'n Go Smart TAG (பங்குதாரர்)

பன்னாடு

[தொகு]
சின்னம் பெயர் அமைவு செயல்பாடு

PLUS Expressways International Berhad (PEIB)
பிளஸ் பன்னாட்டு விரைவுச்சாலை நிறுவனம்
PLUS Expressways International Berhad (PEIB)
2011 பன்னாட்டு விரைவுச்சாலைகள்:
யுனிகெஸ்ட் இன்ப்ரா வெஞ்சர்ஸ் நிறுவனம்
(Uniquest Infra Ventures Private Limited) (இந்தியா)
சிக்காம்பெக்-பாலிமனான் சாலை
(Cikampek–Palimanan Toll Road) (இந்தோனேசியா)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Plus Berhad". Touch 'N Go Information System.
  2. "PLUS Expressways Berhad is a Malaysia-based investment holding company. The Company is engaged in providing expressway operation services". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
  3. "Subsidiaries: Projek Lebuhraya Utara-Selatan Berhad". PLUS Malaysia Berhad. Archived from the original on 31 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளஸ்_விரைவுச்சாலைகள்&oldid=4120026" இலிருந்து மீள்விக்கப்பட்டது