Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2inc
ISO 639-3bpy

பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். உள்ளூரில் இதனை இமார்தர் என அழைக்கின்றனர். இம் மொழி இந்தியாவில் மணிப்பூரிலும், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இவை தவிர வங்காளதேசம், மியன்மார் ஆகிய நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் குறைந்த அளவில் வாழ்கின்றனர். இது, வங்காள மொழி. அசாமிய மொழி, ஒரியா போன்ற பல இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்தும் பெருமளவுக்கு வேறுபடுகின்றது. இம்மொழி மணிப்பூரிலேயே தோற்றம் பெற்று வளர்ந்தது. தொடக்க காலங்களில் இம்மொழி லொக்டாக் ஏரியை அண்டிய பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்ததாகத் தெரிகிறது. இம் மொழி பற்றிய குறிப்புக்கள் 18 ஆம் நூற்றாண்டையும், அதற்குப் பிற்பட்ட காலத்து மூலங்களிலேயே கிடைக்கின்றன. தற்போது இம்மொழி புழங்கும் முக்கியமான பகுதிகள், கங்காபொக், ஹீரொக், மயாங் யம்பால், பிஷ்ணுபூர், குனான், நிங்தான்கோங், ஙய்கோங், தம்னாபொக்ஸ்பி என்பனவாகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abstract of Speakers' Strength of Languages and Mother Tongues - 2011" (PDF). censusindia.gov.in. Archived from the original (PDF) on 20 February 2022. பார்க்கப்பட்ட நாள் 12 June 2022.
  2. "C-16: Population by mother tongue - Assam". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 June 2022.
  3. "C-16: Population by mother tongue - Tripura". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 June 2022.