Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்சேபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்சேபோலிஸ் என்பது மர்ஜானே சத்ரபியின் சுயசரிதை தொடர் (பிரஞ்சு காமிக்ஸ்) ஆகும், இது ஈரானியப் புரட்சியின் போதும் அதற்குப் பின்னரும் ஈரான் மற்றும் ஆஸ்திரியாவில் அவரது குழந்தைப் பருவம் முதல் விடலைப் பருவத்தின் ஆரம்ப வயது வயதுயான காலத்தை சித்தரிக்கிறது. நூலின் தலைப்பான பெர்செபோலிஸ் என்பது பாரசீக பேரரசின் பண்டைய தலைநகரைன பெர்சப்பொலிசைக் குறிக்கிறது. [1] முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட இந்த கிராஃபிக் நினைவுக் குறிப்பு ஆங்கிலம், எசுபானியம், கத்தலான், போர்த்துகீசியம், இத்தாலியம், கிரேக்கம், ஸ்வீடிஷ், பின்னிஷ், ஜார்ஜியன், டச்சு, சீனம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2018 நிலவரப்படி, இது உலகளவில் 2ல இலட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. [2] பெர்செபோலிஸ் 2000 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, இதன் இரண்டாம் பாகமாகிய பெர்செபோலிஸ் 2 2004 இல் எழுதப்பட்டது.

பிரெஞ்சு காமிக்சு வெளியீட்டாளர்களான எல் அசோசியேஷன் மூலப் படைப்பை 2000 மற்றும் 2003 க்கு இடையில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டது. பாந்தியன் புக்ஸ் (வட அமெரிக்கா) மற்றும் ஜொனாதன் கேப் (ஐக்கிய இராஞ்சியம்) ஆகியவை ஆங்கில மொழிபெயர்ப்புகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டன - ஒன்று 2003 இல், மற்றொன்று 2004 இல். பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் மறுபதிப்புகள் 2007 இல் தொடர்ந்தன.

கதைச் சுருக்கம்

[தொகு]

இந்த சுயசரிதை புதினமானது இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் மர்ஜானின் பள்ளிப் பருவத்தின் ஊடாக அப்போதைய ஈரானின் அரசியல் போக்கைப் பதிவுசெய்கிறது. இரண்டாம் பாகமானது அவரின் ஐரோப்பிய வாழ்வையும் அவர் எதிகொள்ளும் அடையாளச் சிக்கல்களை ஒட்டிய நிகழவுகளும் எழுதப்பட்டுள்ளது.

1979இல் ஈரானியப் புரட்சி தோன்றுவதற்கு முன்பு வரை ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு, சமய ரீதியான அடக்குமுறைகள் போன்ற பழமைவாத கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கவில்லை. புரட்சிக்கு முன்புவரை அந்நாடு மேற்கத்தியப் பண்பாட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு இருந்தது. ஈரானின் ஆட்சியாளர்கள் பிரிட்டனின் கைப்பாவையாக இருந்தனர். ஈரானின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி பிரிட்டன் லாபம் ஈட்டியது. இது ஈரானில் கொதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஈரானின் அப்போதைய பிரதமர் முகம்மது மாஸதேக், ஈரானில் செயல்பட்டுவந்த எண்ணெய் நிறுவனங்களைத் நாட்டுடமையாக்கினார். இதனால் ஆத்திரமுற்ற பிரிட்டன், மாஸதேக்கை ஆட்சியிலிருந்து அகற்றியது. இதன் எதிரொலியாக ஈரானிய புரட்சி தொன்றியது. புரட்சிக்குப் பிறகு அடிப்படைவாதிகள் சமயக் கோட்பாட்டை அரசியல் கருத்தியலாக மாற்றினர்.

இந்த போக்குகளை 1969இல் ஈரானில் பிறந்த மர்ஜானே சத்ரபி தன் பிள்ளைப் பருவ நினைவுகளின் வழியே ஈரானிய புரட்சியையொட்டி ஏற்பட்ட அதிகார மாற்றம், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அடிப்படைவாத அடக்குமுறைகள், உயிரிழப்புகள், அரசியல் கைதுகள், ஈரான் – ஈராக் போர் என அந்த நாட்டில் மக்களுக்கு ஏற்பட துன்பங்களை என முதல் பாகத்தில் ஈரானின் வரலாறு குறுக்குவெட்டுத் தோற்றங்களாகப் பதிவுகொள்கின்றன.

புதினத்தின் இரண்டாம் பகுதியில், மர்ஜானின் ஐரோப்பிய வாழ்வைப் பற்றிக் கூறுகிறது. ஐரோப்பாவில் அவர் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல், புதிய கருத்தியல் அறிமுகங்கள் என நகர்கிறது. அடையாளச் சிக்கல் அழைகழிப்பால் மீண்டும் ஈரான் வருகிறார். ஈரானில் அமைதி இன்மையே உள்ளது. சில காலம் வீட்டில் முடங்கியிருந்து பின்னர் மேற்படிப்பு, காதல், திருமணம், மண முறிவு என வாழ்க்கை செல்கிறது. பிறகு மீண்டும் ஐரோப்பா திரும்புகிறார் என கதை நகர்கிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Jones, Malcolm. "'Persepolis', by Marjane Satrapi - Best Fictional Books - Newsweek 2010". 2010.newsweek.com. Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15.
  2. "The Graphic Translation of Persepolis". MotaWord - The World's Fastest Business Translation Platform (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சேபோலிஸ்&oldid=3174227" இலிருந்து மீள்விக்கப்பட்டது