Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பேரணித் திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்ற 20வது உலக சாரணிய ஜம்போரியின் நிறைவு விழா

சாரணியத்தில் பேரணித் திரட்டு (jamboree ஜம்போரி என பரவலாக அறியப்படுகிறது) என்பது தேசிய அல்லது சர்வதேச அளவில் அணிவகுத்துச் செல்லும் சாரணர்கள் மற்றும்/அல்லது பெண் வழிகாட்டிகளின் ஒரு பெரிய கூடலாகும்.

வரலாறு

[தொகு]

1 வது உலக சாரணர் பேரணித் திரட்டு 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றது, இது ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்டது. அதன் பின்னர், இருபத்திமூன்று உலக சாரணியப் பேரணித் திரட்டு, பரவலாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. 26வது உலக ஜம்போரி 2027ல் போலந்தில் நடைபெற உள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]

ஜம்போரி என்ற வார்த்தையின் தோற்றம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இது பல அகராதி உள்ளீடுகளில் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாக, கனடியன் ஆக்சுபோர்டு அகராதியின்படி, இதன் சொற்பிறப்பியலானது "19 ஆம் நூற்றாண்டு, தோற்றம் தெரியவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி (OED) இது அமெரிக்க வட்டாரச் சொல்லில் இருந்து வந்ததாகக் கண்டறிந்தது, 1868 இல் நியூயார்க் ஹெரால்டில் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்து பின்னர் 19 ஆம் ஆண்டில் ஐரிய எழுத்தில் பயன்படுத்தப்பட்டது. [1]

இந்த வார்த்தை பேடன்-பவல் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று சாரணிய இயக்கத்தில் பிரபலமாக நம்பப்படுகிறது, ஆனால் இதற்கு எழுத்துப்பபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை, மேலும் இந்த வார்த்தை பல தசாப்தங்களுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தது.

மற்ற கோட்பாடுகள்

[தொகு]

"ஜம்போரி" என்ற வார்த்தையானது `இந்தி முதல் சுவாகிலி முதல் பூர்வீக அமெரிக்க மொழிகள் வரை பல சாத்தியமான தோற்றங்களைக் கொண்டுள்ளது, இது பேடன்-பவல் பயன்படுத்திய அர்த்தத்தை மேலும் குழப்பமுறச் செய்வதாக உள்ளது. [2] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "OED Online".. (September 2013). Oxford University Press. 
  2. Ashton, E. O. (1947). Swahili Grammar: Including intonation. Longman House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-62701-X.
  3. Nurse, Derek (1993). Swahili and Sabaki: a linguistic history.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரணித்_திரட்டு&oldid=3884663" இலிருந்து மீள்விக்கப்பட்டது