Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மதர் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதர் இந்தியா
இயக்கம்மெஹ்பூப் கான்
கதைவஜகத் மிஷ்ரா
S. அலி ரசா
இசைநௌசாத்
நடிப்புநர்கிஸ்
சுனில் டட்
ராஜேந்திர குமார்
ராஜ் குமார்
ஒளிப்பதிவுபரடூன் A. இரானி
படத்தொகுப்புசம்சுடின் கட்ரி
வெளியீடு1957
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஹிந்தி

மதர் இந்தியா(இந்தியத் தாய்) இத்திரைப்படம் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும்.மேலும் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைக் இத்திரைப்படம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

புதிதாக திருமணமாகும் தம்பதியினர்களான ரதாவும் சாமுவும் தோட்ட வேலை பார்த்துக் கொள்ளும் தொழிலாளலர்களும் இருவரிடத்தும் மிகுந்த அன்பும் கொண்டவர்களாகவும் விளங்கினர்.ஆனால் அத்தோட்ட வேலைகளூக்கு உதவும் வகையில் அவர்கள் ஒருவனிடம் கடன் உதவி கேட்டுப் பெற்றிருந்தனர்.கடனுதவியை வழங்கியவனோ வட்டிப் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக சாமுவின் நிலத்தில் பல கால்வாசியைப் பெற்றான் வஞ்சகமாக.இதனை அறியாதவர்களாக படிப்பறிவு பெற்றிராத சாமுவும் அவன் மனைவியும் பின்னைய காலங்களில் பெரும் துயருக்கு உள்ளாகின்றனர். சிறிது காலங்களில் கணவனை இழக்கும் ராதா தன் பிள்ளைகளைப் பட்டினிப் பசியிலிருந்து காப்பாற்றுவதற்கு துயரங்களையும் பொருட்படுத்தாது உழைக்கின்றார்.பின்னர் அவரின் இரு மகன்களும் வளர்ந்து அவரை எந்த ஒரு குறையுமின்றி வைத்திருக்கின்றனர்.இரு மகன்களில் ஒருவன் மட்டும் எதற்கும் அஞ்சாதவனாகப் பிறந்தான்.அவன் தனது தாயை மதிக்காது தம் நிலச்சொத்துக்களை அபகரித்து குடும்பத்தினை ஏமாற்றிய கடனுதவி செய்தவனை கொலை செய்கின்றான்.இதனைப் பலமுறை தடுத்தும் ராதாவால் அவளிம் இரண்டாவது மகனை நல்லவனாக உயர்த்த முடியவில்லை.திடீரென ஒரு நாள் அவன் காதலித்திருந்த பெண் வேறொருவனுக்கு மணமாகப் போவது தெரிந்து மணப்பெண்ணாக கோலம் பூண்டிருந்த பெண்ணை அலாக்காகத் தூக்கிச் சென்றான் இதனைப் பார்த்த தாயார்.அவனைத் தன் கைகளினாலேயே சுட்டு வீழ்த்துகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதர்_இந்தியா&oldid=4051480" இலிருந்து மீள்விக்கப்பட்டது