Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்-25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்-25
வகை இடைமறித்து தாக்குதல், உளவு பார்த்தல்
உற்பத்தியாளர் மிகோயன்
முதல் பயணம் 6 மார்ச் 1964
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர் ரஷ்ய வான்படை, அல்ஜீரிய வான்படை, சிரிய வான்படை
உற்பத்தி 1970 - 1984
தயாரிப்பு எண்ணிக்கை 1,190

மிக் 25 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1964 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானத்தின் அதிகபட்ச வேகம் (மேக் 2.83+) மற்றும் சக்தி வாய்ந்த ராடர் ஐக்கிய அமெரிக்காவை மக்டொனல் டக்ளஸ் எப்-15 ஈகிள் என்னும் விமானத்தைத் தயாரிக்கத் தூண்டியது. மிக் 25 விமானத்தின் தயாரிப்பானது 1984 ஆம் ஆண்டு 1,190 விமானங்களைத் தயாரித்த பின்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இவ்விமானம் இன்று ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் சிலவற்றில் சேவையில் உள்ளது


வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mikoyan-Gurevich MiG-25
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
பொதுவான தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-25&oldid=1479640" இலிருந்து மீள்விக்கப்பட்டது