மூன்று நிறங்கள்: நீலம்
மூன்று நிறங்கள்: நீலம் | |
---|---|
இயக்கம் | கிரைஸ்டாப்ஃ கெய்ஸ்லாவ்ஸ்கி |
கதை | கிரைஸ்டாப்ஃ கெய்ஸ்லாவ்ஸ்கி |
நடிப்பு | ஜூலியட் பினோஷ் |
விநியோகம் | மிராமாக்ஸ் |
வெளியீடு | 1993 |
ஓட்டம் | 94 நிமிடங்கள் |
மொழி | பிரெஞ்சு |
நீலம் (English: Three Colors: Blue, French: Trois couleurs: Bleu) புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் கிரைஸ்டாப்ஃ கெய்ஸ்லாவ்ஸ்கி (Krzysztof Kieślowski) அவர்களின் மூன்று நிறங்கள் திரைப்பட வரிசையில் முதலாவது படமாகும். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களில் விடுதலையை (Liberty) உட்கருவாகக் கொண்டது. வெள்ளை மற்றும் சிவப்பு அகியவை இப்படத்தைத் தொடர்ந்து வெளிவந்தன.
கதாபாத்திரங்கள்
[தொகு]ஜூலியட் பினோஷ் (Juliette Binoche) : ஜூலி.
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுத்த ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. அவள் மனித வாழ்வின் இன்ப துன்பங்கள், பாசப் பிணைப்புகளிலிருந்து 'விடுதலை' அடைந்து 'மனக்கொலை' (Spiritual Suicide) செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன.
விருதுகள்
[தொகு]வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகள்.
துணுக்குகள்
[தொகு]சுஹாசினி அவர்கள் இயக்கிய இந்திரா திரைப்படத்தில் நாயகி தன் பின்கரத்தை சுவற்றோடு உராசிச்சென்று சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி இப்படத்தில் வரும் காட்சியைப் போன்று அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.