Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மெகா மைண்ட் (2010) திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெகா மைண்ட் திரைப்பட தலைப்பு

மெகா மைண்ட் (Mega mind) (தமிழ் :அதிகமான அறிவுடையவன்) 2010 ல் வெளிவந்த ஒரு அசைவூட்ட நகைச்சுவை திரைப்படம் ஆகும் , இந்த திரைப்படம் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது . இந்த திரைப்படத்திற்கு வில் ஃபேரல்  , டினா ஃபே , ஜோன்னாஹ் ஹில் , டேவிட் கிராஸ் ,பிராட் பிட் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.[1] டாம் மேக் கிராத் இயக்கத்தில் இந்த திரைப்படம் நவம்பர் 5 2010 ல் வெளிவந்தது

கதை சுருக்கம்

[தொகு]

பல வருடங்களுக்கு முன்னர் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்ததில் இருந்து மெட்ரோ மனிதன் சக்திகளை கொண்டு மக்களை காப்பாற்றும் அதிசக்தி வாய்ந்த நகர கதாநாயகனவும் மெகா மைண்ட் ஒரு அதி புத்திசாலி வில்லனாகவும் பூமியில் இருந்து வருகின்றனர் , ஒரு முறை ஆய்வு மையத்தை தாக்க நினைக்கும்போது மெட்ரோ மனிதன் தடுக்க வரும்போது மெகா மைண்ட் தாக்குதலால் மெட்ரோ மனிதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது ,

இதனையடுத்து மெகா மைண்ட் எதிர்பாராமல் இந்த விஷயம் நடந்துவிட்டது என்றாலும் மெட்ரோ மனிதன் இல்லாத மெட்ரோ நகரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் மெகா மைண்ட் சலிப்போடு காணப்படுகிறார் , உருவத்தை மற்றும் கருவியுடன் ரிச்சி என்ற பெண்ணை பெர்னார்ட் என்ற அடையாளத்துக்கு மாறி நேசிக்கிறார் , ஸ்டேவெர்ட் என்ற இளைஞரை அடுத்த அதிசக்தி வாய்ந்த கதாநாயகனாக மாற்றவும் செய்கிறார் , இப்போது ஸ்டெவெர்ட் க்கு பறக்கும் சக்தி , பயங்கர வலிமை , நெருப்புத்தாக்குதல் என பல்வேறு சக்திகள் கிடைத்தாலும் சுயநலத்தால் ஸ்டெவேர்ட் வில்லனாக மாறுகிறார் ,

மெட்ரோ மனிதன் வாழ்க்கை முடிந்து போனது ஒரு நாடகம் . மெட்ரோ மனிதன் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு அவருடைய சிறுவயது ஆசையான இசை கலைஞர் ஆவதற்காகவே இந்த பொய் கூறினார் என்றும் இந்த புதிய வில்லனை தோற்கடிக்க போராடுவதில் விருப்பம் இல்லை எனவும் மெட்ரோ மனிதன் சொன்ன பிறகு மேலும் அவரை கட்டாயப்படுத்த விருப்பம் இல்லாமல் மெகா மைண்ட் புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி திட்டங்களை உருவாக்கி கஷ்டப்பட்டு எல்லோரையும் ஸ்டெவார்ட் இடம்  இருந்து காப்பாற்றுவதுதான் இந்த கதையின் முடிவு

சான்றுகள்

[தொகு]
  1. SuperHeroHype (August 16, 2009). "Ferrell, Pitt and Hill to voice Oobermind". Superhero Hype!. பார்க்கப்பட்ட நாள் August 18, 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]