யூபலினோசின் சுரங்கப்பாதை
யூபலினியன் நீர்வழியின் மிக விசாலமான பகுதி ஒன்றின் உள்ளே. | |
மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | சாமோஸ், கிரேக்க நாடு |
ஆள்கூறுகள் | 37°41′38″N 26°55′48″E / 37.694°N 26.930°E |
தற்போதைய நிலை | திறந்துள்ளது |
தொழினுட்பத் தகவல்கள் | |
வடிவமைப்புப் பொறியாளர் | யூபலினோஸ் |
நீளம் | 1036 மீட்டர் |
யூபலினோசின் சுரங்கப்பாதை அல்லது யூபலினியன் நீர்வழி (Tunnel of Eupalinos அல்லது Eupalinian aqueduct கிரேக்கம்: Ευπαλίνιον όρυγμα ) என்பது கிரேக்க நாட்டின், சமோசின் காஸ்ட்ரோ மலையின் வழியாக செல்லும் 1,036 மீ (3,399 அடி) நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும். இது கிமு 6 ஆம் நூற்றாண்டில் நீர்வழியாக பயன்படுத்த அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில் குழாய் அமைக்கப்பட்டு நீர் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதை வரலாற்றில் அறியப்பட்ட இரண்டாவது சுரங்கப்பாதையாகும். இது இரு முனைகளிலிருந்தும் தோண்டப்பட்டது ( பண்டைக் கிரேக்கம்: ἀμφίστομον, "இரண்டு திறப்புகளைக் கொண்டவை"), மேலும் அவ்வாறு செய்வதில் வடிவியல் அடிப்படையிலான அணுகுமுறை முதலில் பயன்படுத்தப்பட்டது. [1] இன்று இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது.
ஆரம்பகால வரலாறு
[தொகு]யூபாலினியன் நீர்வழி எரோடோடசால் விவரிக்கப்பட்டது ( வரலாறுகள் 3.60), அவர் இல்லாமல் இதை கண்டுபிடித்திருக்க முடியாது:
- நான் சாமோசின் வரலாற்றில் எனக்கு தேவைப்பட்டதை விட நீண்ட காலம் தங்கி இருந்தேன். ஏனென்றால் கிரேக்க உலகில் மூன்று பெரிய கட்டிடங்கள் மற்றும் பொறியியல் சாதனைகளுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள்: முதலாவது, கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம், எட்டு அடி அகலம், எட்டு அடி உயரம் கொண்ட ஒரு சுரங்கப்பாதை, தொல்லாயிரம் அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தின் வழியாக அமைக்கபட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் வழாயாக தண்ணீர் குழாய் அமைக்கபட்டு நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது நாஸ்ட்ரோபஸின் மகன் யூபாலினஸ் என்ற மெகாரியனின் பணி.[2]
இந்த சுரங்கப்பாதை அப்பல்லோவின் ஹோமரிக் கீதத்தில் குறிப்பிடப்பட்டடிருகலாம், என்பதை அதில் உள்ள "watered Samos" என்ற சொல் காட்டுகிறது. [3] கிமு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பழங்கால தலைநகரான சமோஸ் நகருக்கு (இன்று பித்தகோரியன் என்று அழைக்கப்படுகிறது) தேவைப்படும் தண்ணீரை கொண்டுவருவதற்காக மெகாராவைச் சேர்ந்த பொறியாளர் யூபலினோசின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டு குழுக்களால் சுரங்கப்பாதை அகழப்பட்டது. மக்கள்தொகை பெருகியதன் காரணத்தினால் இதன் தேவை அவசியமானது: சமோஸ் நகரத்தின் எல்லைக்குள் உள்ள கிணறுகள் மற்றும் குட்டைகளின் கொள்ளளவில் உள்ள நீராதாரம் நகரமக்களின் தேவைக்கு போதாத நிலை ஏற்பட்டது. அதேசமயம் தீவின் முக்கிய நன்னீர் ஆதாரமானது நகரத்திலிருந்து காஸ்ட்ரோ மலையின் மறுபுறத்தில் இருந்தது. மேலும் இது தற்காப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. நீராதாராக் குழாய் நிலத்தடியில் செல்வதால், நகரை முற்றுகையிடும் எதிரிகளால் அதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இல்லையெனில் நகருக்கான நீர் விநியோகத்தை அவர்கள் துண்டிப்பர். சுரங்கத்தின் கட்டுமான காலம் முற்றிலும் தெளிவாக தெரியவில்லை. சாமோசை கிமு 540-522 காலகட்டத்தில் ஆட்சி புரிந்த சர்வாதிகாரி பாலிகிராட்டீசின் பின்னணியில் எரோடோடஸ் சுரங்கப்பாதை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் பாலிகிக்ராட்டீசே இதை கட்டுவித்தார் என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. யூபலினியன் நீர்க்குழாய் 1100 ஆண்டுகளுக்கு நீர்வழி பாதையாக பயன்படுத்தப்பட்டது. கி.பி ஏழாம் நூற்றாண்டில், இதன் தெற்கு முனை தற்காப்பு புகலிடமாக பயன்படுத்தப்பட்டது. [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ The oldest known tunnel at which two teams advanced simultaneously is the Siloam tunnel in Jerusalem, completed around 700 BC.
- ↑ Herodotus (1954). The Histories. Translated by Aubrey de Sélincourt. Harmondsworth: Penguin. pp. 199–200.
- ↑ Homeric Hymn to Apollo, 41
- ↑ Kienast, H. J. The Aqueduct of Eupalinos on Samos. Athens. pp. 16 & 35.