ராஜ்சமந்து
ராஜ்சமந்து | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் இராஜஸ்தன் மாநிலத்தில் ராஜ்சமந்து நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°04′N 73°53′E / 25.07°N 73.88°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | ராஜ்சமந்து |
தோற்றுவித்தவர் | ராணா இராஜ் சிங் |
பெயர்ச்சூட்டு | ராணா இராஜ் சிங் |
ஏற்றம் | 547 m (1,795 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 67,798 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | RJ-30 |
இணையதளம் | rajsamand |
ராஜ்சமந்து (Rajsamand) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் 17-ஆம் நூற்றாண்டில் மேவார் மன்னர் ராணா இராஜ் சிங் நிறுவிய ராஜ்சமந்து செயற்கை ஏரியால் அறியப்படுகிறது.
புவியியல்
[தொகு]ராஜ்சமந்து நகரம் 25°04′N 73°53′E / 25.07°N 73.88°E பாகையில், கடல் மட்டத்திலிருந்து 547 மீட்டர் (1749 அடி) உயரத்தில் அமைந்துள்ள்து.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 36 வார்டுகளும், 13,765 வீடுகளும் கொண்ட ராஜ்சமந்து நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 67,798 ஆகும். அதில் ஆண்கள் 35,033 மற்றும் பெண்கள் 32,765 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8121 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.22 % ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 84.17%, இசுலாமியர் 9.54%, சமணர்கள் 5.63% மற்றவர்கள் 0.66% ஆகவுள்ளனர். [3]
பொருளாதாரம்
[தொகு]ராஜ்சமந்து நகரத்தில் பளிங்கு மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை நாடு முழுவதும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு துத்தநகம் வெள்ளி, மங்கனீசு போன்ற கனிமச் சுரங்கங்கள் உள்ளது.
சுற்றுலா
[தொகு]- உதய்ப்பூர் - 62 கிலோ மீட்டர்
- கும்பல்கர்க் கோட்டை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ Falling Rain Genomics, Inc - Rajsamand
- ↑ Rajsamand Population Census 2011