லைகாபெட்டஸ் மலை
Lykavittos
Λυκαβηττός | |
---|---|
Neighborhood | |
ஆள்கூறுகள்: 37°58′40″N 23°44′30″E / 37.97778°N 23.74167°E | |
Country | கிரேக்கம் |
பிராந்தியம் | அட்டிகா |
நகரம் | ஏதென்ஸ் |
அஞ்சல் குறியீடு | 114 71, 115 21 |
இணையதளம் | www.lycabettushill.com |
லைகாபெட்டஸ் மலை (Mount Lycabettus), என்பது கிரேக்க தலைநகரான ஏதென்சில் உள்ள ஒரு கிரீத்தேசிய சுண்ணக்கல் மலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 277 மீட்டர் (908 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இதன் உச்சி நடு ஏதென்சில் மிக உயரமான இடமாகும். இந்த மலையின் அடிவாரமானது பைன் மரங்கள் நிறைந்ததாக உள்ளது. மலையின் கிழக்கே கீழே உள்ள குடியிருப்புப் பகுதியையும் இதே பெயரால் குறிக்கப்படுகிறது.
இந்த மலை ஒரு சுற்றுலாத் தலமாகும். கொலோனாகியில் (அரிஸ்டிப்போ தெருவில் தொடருந்து நிலையத்தைக் காணலாம்) கீழ் முனையிலிருந்து மலை ஏறும் லைகாபெட்டஸ் புனிகுலர் என்ற இழுவை ஊர்தி மூலம் ஏறலாம். இதன் இரண்டு சிகரங்களில் 19 ஆம் நூற்றாண்டின் புனித ஜார்ஜ் தேவாலயம், ஒரு அரங்கம், ஒரு உணவகம் போன்றவை உள்ளன.
தொன்மவியல் கதைகள்
[தொகு]லைகாபெட்டஸ் மலையானது பல்வேறு தொன்மங்களில் குறிப்பிடப்படுகிறது. பிரபலமான கதைகளில் இது ஒரு காலத்தில் ஓநாய்களின் புகலிடமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது (கிரேக்க மொழியில் லைகோஸ்). இதுவே இதன் பெயரின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் ("ஓநாய்களால் நடக்கும் மலை" என்று பொருள்). [1]
அரங்கம்
[தொகு]மலையின் உச்சியில் ஒரு பெரிய திறந்தவெளி அரங்கம் உள்ளது. இதில் பல கிரேக்க மற்றும் சர்வதேச இசை நிகழ்ச்சிகள் நடத்துள்ளது. லைகாபெட்டஸ் அரங்கில் ரே சார்ல்ஸ், ஜோன் பேஸ், பிபி கிங், சக் பெரி, ஜெர்ரி லீ லூயிஸ், லியோனார்ட் கோஹன், ஜேம்ஸ் ப்ரௌன், பாப் டிலான், பாக்கோ தே லூசீயா, அல் டி மீயோலா, ஜான் மெக் லாஃப்லின், கேரி மூர், பீட்டர் கேப்ரியல், பிளாக் சாபத், நிக் கேவ், பிஜோர்க், டெட் கேன் டான்ஸ், பெட் ஷாப் பாய்ஸ், டீப் பர்பில், பிளேஸ்போ, மோரிஸ்சி, ரேடியோஹெட், மோபி, மாஸிவ் அட்டாக் , ஃபெயித் நோ மோர் , ஃபெயித்லெஸ், வைட்சிப்நாட், பட்டி ஸ்மித், வனேசா மே, பிரையன் ஃபெர்ரி, டிட்டோ பியூன்டே, பியூனா விஸ்டா சோஷியல் கிளப், ஒரிஷாஸ், தி ப்ராடிஜி, அயர்ன் மெய்டன், நாசரேத்து, பிளாக்மோர்ஸ் நைட் அண்ட் ஸ்கார்பியன்ஸ் போன்ற கலைஞர்கள் தங்கள் கலையை நிகழ்த்தியுள்ளனர்.
காட்சியகம்
[தொகு]-
லைகாபெட்டஸ் மலையிலிருந்து ஏதென்சின் ஒரு காட்சி
-
பிரான்சிஸ் பெட்ஃபோர்ட், 1862 இல் அக்ரோபோலிஸிலிருந்து படம்பிடித்தது.
-
புனித ஜார்ஜ் தேவாலம்
-
லைகாபெட்டசில் உள்ள அரங்கம்
-
ஏதென்சின் தோற்றம்