Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

வாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WLA புரூக்லின் அருங்காட்சியகம், படகு கட்டும் காட்சி 2
வாசிகள், மார்ழ்சல், யாப் தீவுகள் – பசிபிக் திரட்டு - பீபாடி அருங்காட்சியகம், ஃஆர்வார்டு பல்கலைக்கழகம் - DSC05732
நிப்பானிய வாசி

வாசி (Adze) (/ˈædz/; மாற்று வடிவம்: வாய்ச்சி (adz)) என்பது கூரிய வெட்டும் முனையுள்ள தொல்பழம் விளிம்புவகைக் கருவி ஆகும்.[1] இது கற்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது. இவை மரவேலையில் கையால் மரத்தைச் செதுக்கவோ பரப்பைச் சீராக்கவோ கோடரியைப் போலவே பயன்படுகின்றன. ஆனால் இதில் வெட்டும் விளிம்பு பிடிக்குச் செங்குத்தாக அமையும். இதில் கைவாசி, வாய்ச்சி என இருவகை உண்டு. கைவாசி சிறு கைப்பிடியுள்ள கருவியாகும். வாசி என்பது இருகைகளாலும் வீச்சுடன் கால்மட்டத்தில் கையாளும் நீண்ட பிடியுடைய கருவியாகும். இதில் வெட்டும் அலகு கார் அல்லது ஏர்க்கொழுவைப் போல கருவித்தண்டுக்குச் செங்குத்தாக அமையும்.ஆனால் கோடரியின் அலகு கைப்பிடிக்கு இணையாகவே அமையும். இதைப் போன்ற ஆனால் மொக்கையன வெட்டு விளிம்புள்ள தரையைக் கொத்தும் கருவி குறடு அல்லது கொட்டு எனப்படுகிறது.

வரலாறு

[தொகு]
தோபித் தீவு மைக்ரோனேசிய மரக்கலத்துக்கான வாசி பொருத்திய துடுப்பு

ஆப்பிரிக்கா

[தொகு]

எகிப்தில் மூன்றாம் பேரரசு காலம் முதல் வாசி பயன்பாட்டில் இருந்துள்ளது.[2] தொடக்கத்தில் வாசிகள் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டன. ஆனால் முந்துபேரரசுக் கால எகிப்திலேயே கற்களுக்கு மாற்றாக செம்பு வாசிகள் வழக்கில் வந்துள்ளன.[3]கல்வாசிகள் பிடியுடன் கட்டிப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் செம்பு வாசிகள் பிடித் துளையில் செருகிப் பொருத்தப்பட்டன. எகிப்திய வாசிகளை அருங்காட்சியகத்திலும் பெட்ரி அருங்காட்சியக வலைத்தளத்திலும் காணலாம்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Any tool with a sharp cutting edge. Oxford English Dictionary: Edge-tool, edged-tool.
  2. Rice M (1999). Who's who in ancient Egypt. New York: Routledge. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15448-0. வாசி ஏந்திய, மரக்கலம் கட்டும் மூன்றாம் பேரரசுக் கால அங்குவான் சிலை
  3. Shubert SB, Bard, KA (1999). Encyclopedia of the archaeology of ancient Egypt. New York: Routledge. p. 458. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18589-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

நூற்றொகை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசி&oldid=3228171" இலிருந்து மீள்விக்கப்பட்டது