Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

வாணவெடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தாண்டு இரவில் சிட்னி நகர வானில் நிகழ்ந்த வாணவேடிக்கை
எக்சுப்போ 2010 தொடக்கவிழாவின் போது நிகழ்ந்த வாணவேடிக்கைக் காணொளி
வாணவெடி அண்மைத் தோற்றம்

வாணவெடி என்பது, ஒரு வகையான வெடிபொருள் வாணத்தொழில்நுட்பப் பொருள் ஆகும். இது அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பயன்படுகிறது. பொதுவாக இது வாணவெடிக் காட்சி, அல்லது வாணவேடிக்கை என்று அழைக்கப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைகின்றது. வாணவெடிக் காட்சி அல்லது வாண வேடிக்கை என்பது, வாணவெடிகளினால் உருவாகும் பலவகையான தோற்றங்களைக் காட்சிப்படித்தும் நிகழ்வு ஆகும். வாணவெடிப் போட்டிகளும் பல்வேறு இடங்களில் நிகழ்வது உண்டு. பல்வேறு வடிவங்களில் அமையும் வாணவெடிகள் பொதுவாக நான்கு விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, ஒலி, ஒளி, புகை, மிதக்கும் பொருட்கள் என்பன. வணவெடிகள், சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, வெள்ளி எனப் பல்வேறு நிறத் தோற்றங்களையும் கோலங்களையும் உருவாக்கும் வகையில், வாணவெடிகளை வடிவமைக்கலாம். உலகின் எல்லாப் பகுதிகளிலும் அரசியல், சமய, பண்பாட்டு நிகழ்வுகள் உட்படப் பல நிகழ்வுகளின்போது வாண வேடிக்கைகள் இடம்பெறுகின்றன.

வாணவெடி ஏழாம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவின் நான்கு பெரிய கண்டுபிடிப்புக்களின் ஒன்றான வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே வாணவெடி உருவானது. தீய ஆவிகளை விரட்டுவது என்னும் நம்பிக்கையில் இவை முதலில் பயன்பட்டன. சீனப் புத்தாண்டு, நடு இலையுதிர்கால நிலவு விழா போன்ற கொண்டாட்டங்களின் போது வாண வேடிக்கைகள் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. இன்றும் உலகில் வாணவெடிகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி நாடாக விளங்குவது சீனாவே.

வாணவெடிக் காட்சி நிகழும் இடத்தைப் பொருத்து வாணவெடிகள், நில வாணவெடிகள் அல்லது வான் வாணவெடிகள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப் படுகின்றன. இரண்டாவது வகையில் அவற்றை வானுக்கு உந்துவதற்கான வாணங்கள் வாணவெடிகளிலேயே இருக்கும், அல்லது எறிகணைவீசிகள் மூலம் அவற்றை வானில் செலுத்துவர்.

வாணவெடிகளில் உள்ள மிகப் பொதுவான அம்சம், வெடிமருந்து நிரப்பிய, தாள் அல்லது அட்டையினால் ஆன குழாய்கள் ஆகும். இத்தகைய பலவிதமான குழாய்கள் சேர்த்து அமைக்கப்படுவதனால், அவை எரியும்போது பல்வேறு நிறங்களும் வடிவங்களும் உண்டாகின்றன. வாணவெடிகளின் மிகப் பொதுவான வடிவம் வாணம் ஆகும். வாணங்கள் போரிலும் பயன்பட்டன. அஞ்சல்களை அனுப்புவதற்கும் வாணத்தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளதுடன் மாதிரி ஏவுகணைகளை உந்துவதற்கும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

வான் வாணவெடிகளைவிட, நில வாணவெடிகள் பெரிதாக விரும்பப்படுவதில்லை எனினும் நில வாணவெடிகள் மூலமும் அழகான தோற்றங்களை ஏற்படுத்தமுடியும். இதன்மூலம், எளிமையான சுழலும் சில்லுகள் முதல் முப்பரிமாணக் கோளங்கள் வரை உருவாக்குகின்றனர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "3D Globe using only fire power". Saint Philip's Fireworks Factory. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாணவெடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணவெடி&oldid=2916981" இலிருந்து மீள்விக்கப்பட்டது