Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

விட்டில் பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்டில் பூச்சி
(Macroglossum stellatarum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலிறகிகள்
தரப்படுத்தப்படாத:
விட்டில் பூச்சி

விட்டில் பூச்சி அல்லது அந்துப்பூச்சி (moth) என்பது பட்டாம்பூச்சியை ஒத்த லெப்பிடோப்டெரா (lepidoptera) வகையைச் சேர்ந்த பூச்சி ஆகும். பட்டாம்பூச்சிகளோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு அந்துப்பூச்சி என்று பெயர். இரவில் நடமாடும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். பட்டு உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.

ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.[1] பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள். ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலுலாவிகளாகவும், மாலையுலாவிகள் ஆகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவற்றில் ஒரு வகையான அமெரிக்க அந்து பூச்சிகள் ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர்கள் பறந்து இந்தியாவிற்கு வருகின்றன.[2]

அறிவியல் வகைப்பாடு

[தொகு]

இவை பூச்சி இனத்தின் செதிலிறக்கையின வரிசையைச் சார்ந்தவை.

(லெப்பிசு (Lepis) - செதில், ப்டெரான் (pteron) - இறக்கை (சிறகு) – Lepidoptera)

இவ்வரிசையில் உள்ள பெரும்பான்மையான பூச்சிகள் விட்டில் பூச்சிகள் ஆகும்.

விட்டில் பூச்சியின் வாழ்கைச் சுழற்சி

[தொகு]

ஒவ்வொரு விட்டில் பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன.

  1. முட்டைப் பருவம் (Egg),
  2. புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) (Larva)
  3. கூட்டுப்புழு பருவம் (Pupa)
  4. இறக்கைகளுடன் முழு விட்டில் பூச்சி நிலை (Adult).

செரி கல்ச்சர்

[தொகு]

செயற்கையாக பட்டுப்புழு அல்லது கூட்டுப்புழு வளர்த்தல் முறை செரி கல்ச்சர் எனப்படும். பட்டுப்புழு வளர்ப்பு மூலம் பட்டு நூலிழை சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு நெசவு, வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் ஆகும். பட்டுப்புழுவில் பல வணிக இனங்கள் உள்ளன என்றாலும், பாம்பிக்ஸ் மோரி பட்டுப்புழு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வணிக இனம் ஆகும்.

விட்டில் பூச்சிகள் முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இவை மல்பெரி இலைகளின் மேல் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பொரித்து புழுக்களாக மாற்றம் அடைகின்றன. புழுக்கள், மல்பெரி இலைகளை உண்டு ககூன்களாக (புழுக்கூடு) மாறுகின்றன. ககூன்களை அறுவடை செய்து, வெந்நீரில் இடுவதன் மூலம் பட்டு நூலிழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.


பட்டாம்பூச்சி-விட்டில் பூச்சி வேறுபாடுகள்

[தொகு]
பட்டாம்பூச்சி விட்டில் பூச்சி
பட்டாம்பூச்சி பெரும்பாலும் பகல் உலாவிகள் விட்டில் பூச்சிகள் இரவு உலாவிகள்
ஒத்த உணர்கொம்புகளை உடையவை மாறுபட்ட இறகு போன்ற / கூரிய உணர்கொம்புகளை உடையவை
கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு இல்லை கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்
பிரகாசமானநிறம் உடையவை மந்தநிறம் உடையவை
இறக்கைகள் ஒன்றாக நிமிர்ந்த நிலையில் அமைந்து இருக்கும் இறக்கைகள் தங்கள் பக்க ஓய்வு நிலையில் அமைந்து இருக்கும்
மெல்லிய உடல் உடையவை தடித்த உடல் உடையவை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Moths". Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  2. நாளைக்கு 300 கி.மீ தூரம் பயணிக்கும் அமெரிக்க அந்துப் பூச்சிகளால் மக்காச்சோள மகசூல் கடும் பாதிப்பு: படைப்புழு தாக்குதலால் பரிதவிக்கும் தமிழக விவசாயிகள் இந்து தமிழ் திசை 02.பிப்ரவரி.2019

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டில்_பூச்சி&oldid=3767000" இலிருந்து மீள்விக்கப்பட்டது